சென்னை: நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் முதன்மையானவர் நேதாஜி …
Read More »மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ – மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டு வருவதை மனதில்கொண்டு மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ உருவாக்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-வது ஆண்டு துவக்க விழாவினை பிரமாண்டமான அளவில் நடத்துவது. மக்கள் …
Read More »குடியரசு தினம், தைப்பூசம் தொடர்விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு செல்ல 580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!
சென்னை: தொடர்விடுமுறையை ஒட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. குடியரசு தினம், தைப்பூசம் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வியாழக்கிழமை …
Read More »மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் துறை, சமூகநலத் துறை மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையின் சார்பில், பல்வேறு புதிய நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. ஏற்கெனவே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கு அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. சமூக நலத்துறையைப் பொறுத்தவரையில், …
Read More »ரூ.1003 கோடி முதலீடு, 840 பேருக்கு வேலைவாய்ப்பு | தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜன.,23) தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …
Read More »வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை தோல்வியடைந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர என்ன செய்யப் போகிறது? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து …
Read More »மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்று வரை அந்தப் பணிகள் நிறைவடையவில்லை. எனவே மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கி …
Read More »இறுதி பட்டியலின்படி தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளர்கள்: கடந்த ஆண்டைவிட 7.61 லட்சம் பேர் அதிகம்
சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு வாக்காளர்கள் எண்ணிக்கையைவிட 7.61 லட்சம் பேர் அதிகமாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு கூறியதாவது: தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில், 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக …
Read More »ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை ஆண்டு கூட்டத்தை நடத்துவது, ஆளுநரை அழைப்பதா வேண்டாமா என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசுதனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. விரைவில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக …
Read More »கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் இடைநீக்க விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் தடை
சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதமான இறுதி முடிவும் எடுக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் …
Read More »