சென்னை: புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதத்தை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், …
Read More »பயணிகள் குறைவு; விமானிகள் வரவில்லை – சென்னையில் 22 விமானங்கள் ரத்து
சென்னை: பயணிகள் எண்ணிக்கை குறைவு மற்றும் விமானிகள் வராததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 4-ம் தேதி அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஓடுபாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்ட பின்னர், நிலைமை ஓரளவு சீரானதும் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மீண்டும் விமான சேவை …
Read More »மிக்ஜாம் புயல் பாதிப்பு | வாகனங்களுக்கு இழப்பீடு பெற சிறப்பு முகாம்
சென்னை: அரசு பொது காப்பீட்டு நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனம் சார்பில், புயலால் ஏற்பட்டுள்ள பொருள், வாகன சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களில் ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, பாலிசிதாரர்கள் இழப்பீடு கோருவதற்கு 71flood23@newindia.co.in என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம். மேலும், www.newindia.co.in என்ற இணையதளத்தில் விவரங்களை …
Read More »சென்னை வெள்ளம் | மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இணைய மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் அழைப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பதிவான மழையினால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழ்ந்துள்ளன. அதன் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நீரை வெளியேற்றுவது, அதனால் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இயங்க தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக …
Read More »சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீரை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்: அமைச்சரை பொதுமக்கள் முற்றுகை
சென்னை: கனமழையால் சென்னை மாநகரே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக் கோரியும், மின் இணைப்பு, உணவு வழங்கக் கோரியும் சென்னையின் பல இடங்களில் நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. அந்த வகையில், வியாசர்பாடியில் உள்ள குடியிருப்பு …
Read More »வெள்ளத்தால் லாரிகளை இயக்க முடியவில்லை: சென்னையில் குப்பை அகற்றும் பணி பாதிப்பு
சென்னை: சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பணியாளர்களின் பாதுகாப்பு கருதிகடந்த 4-ம் தேதி முதல் வீடுவீடாககுப்பை சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மழைநீர் வடிந்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக குப்பை அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை தெருவோரங்கள், காலி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் …
Read More »மிக்ஜாம் புயல் பாதிப்பு | 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்
சென்னை: புயல், கனமழை எதிரொலியாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் வீடு, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மிதந்தன. பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்வது போல கார்கள் அடித்துச் செல்லப்படும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏராளமான இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. தற்போது சென்னையின் சில இடங்களில் தண்ணீர் வடிந்துள்ள நிலையில் கார் மற்றும் இருசக்கர வாகன மெக்கானிக்குகளை …
Read More »ஆர்எஸ்எஸ் சார்பில் உணவு பொருட்கள் விநியோகம்
சென்னை: சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் தண்ணீர், உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குரோம்பேட்டை, கொளத்தூர், வேளச்சேரி,மடிப்பாக்கம் உட்பட 15 இடங்களில் உள்ள பள்ளிகளில், ஆர்எஸ்எஸ்அமைப்பினர் முகாம்களை அமைத்துள்ளனர். அங்கு, பொதுமக்களுக்கு தேவையான உணவுகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளே சமைத்து பல்வேறு பகுதிகளுக்குஎடுத்துச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். சென்னையின் ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் பேருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஆர்எஸ்எஸ் …
Read More »புயல், மழை ஓய்ந்தும் வெள்ளம் வடியாமல் தவிக்கும் வேளச்சேரி, வியாசர்பாடி, முடிச்சூர், மேற்கு தாம்பரம் மக்கள்
சென்னை: மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில …
Read More »சென்னையில் மழை நீரை வெளியேற்ற என்எல்சி நிறுவனம் 16 ராட்சத மோட்டார்கள் அனுப்பிவைப்பு
சென்னை: சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற, நெய்வேலியில் இருந்து என்எல்சி இந்தியாநிறுவனம் 16 ராட்சத மோட்டார்களை அனுப்பி வைத்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் மழை நீர் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. அவற்றைஅகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுஉள்ளது. இந்நிலையில், சென்னை …
Read More »