Breaking News
Home / செய்திகள் (page 87)

செய்திகள்

“தமிழக நலனை தாரைவார்த்த திமுக அரசு” – அன்புமணி சாடல் @ புதிய மருத்துவக் கல்லூரி விவகாரம்

சென்னை: ‘இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் …

Read More »

சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியல்

சென்னை: சென்னையில் 4 நாட்கள் ஆகியும் மின்சாரம் வரவில்லை. மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.காசிமேடு புதுமனை குப்பத்தில், மழைநீர் அகற்றப்படாமல் உள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் எனக்கூறி சாலை மறியல் நடந்தது. ரங்கராஜபுரம், சூரியநாராயணன் தெருவிலும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.மணலி …

Read More »

மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்

மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட தொழில் மோட்டார் வாகனத் தொழில் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிலையில், அரசின் வருமானத்தைப் பெருக்க …

Read More »

சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி..!!

சென்னை: சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். புயல், மழை வெள்ள பாதிப்பை பார்வையிட ஒன்றிய அரசின் பல்துறை குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Read More »

ரெட்மி 13C 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 13C 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த …

Read More »

டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமனம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்த பதவி நியமனத்தில் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனால் தலைவர் பதவி நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக …

Read More »

“நேக்காக” வென்ற பாஜக.. அதிக ஓட்டு வாங்கியும் காங்கிரஸ் தோற்றது எப்படி? அழகிரி வெளியிட்ட டேட்டா இதோ

சென்னை: 5 மாநில தேர்தல்களில் மொத்தமாக பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளை பெற்றும் தோல்வியடைந்து இருப்பதை எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். 5 மாநில தேர்தல் தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, “தோல்வி அல்ல, எச்சரிக்கை.. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் 4.81 கோடி வாக்குகள் பெற்ற பா.ஜ.க. 342 …

Read More »

வெள்ளத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதியுதவி: நடிகர் பாலாவுக்கு குவியும் பாராட்டு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா நிதி உதவி அளித்துள்ளார் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப் போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொடர்ந்து இவர் எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். தனது …

Read More »

வாட்டர் பாட்டில் ரூ.100, பால் ரூ.150.. தலைமை செயலாளர் எச்சரிக்கை..!

சென்னை: அத்தியாவசிய பொருட்களான பால் காய்கறிகள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் கரையை கடந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் பெரும்பாலான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்பு பணியாளர்கள் மக்களை மீட்டு வந்தாலும் …

Read More »

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து சிறையில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த நவ.15-ம் தேதி …

Read More »