சென்னை: சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
புயல், மழை வெள்ள பாதிப்பை பார்வையிட ஒன்றிய அரசின் பல்துறை குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.