சென்னை: சென்னையில் 4 நாட்கள் ஆகியும் மின்சாரம் வரவில்லை. மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.காசிமேடு புதுமனை குப்பத்தில், மழைநீர் அகற்றப்படாமல் உள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் எனக்கூறி சாலை மறியல் நடந்தது. ரங்கராஜபுரம், சூரியநாராயணன் தெருவிலும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.மணலி பகுதியிலும் மின்சாரம் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மயிலாப்பூரில் சில இடங்களில் தண்ணீர் அகற்றப்படவில்லை. சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்திவில்லை.
மின்சாரம் கிடைக்கவில்லை எனக்கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வட சென்னையில் ஆர்கே நகர் தெற்கு பகுதி, ஏகாம்பரம் தெரு பகுதி மக்கள், மழைநீருடன் சாக்கடை நீர் வீட்டிற்குள் புகுந்ததால், அதனை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்தனர்வியாசர்பாடி பகுதியிலும் மின்சாரம் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியல் நடந்தது. மேற்கு தாம்பரம் பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் குடியிருப்புகள் இருளில் மூழ்கி உள்ளன.பட்டாளம் காவலர் குடியிருப்பு பகுதியிலும் மின்சாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.சென்னை குன்றத்தூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் மழை நீர் வடிய 2 நாட்களாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை பெரும்பாக்கம் மற்றும் குமரன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் ஓஎம்ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், உணவு, தண்ணீர் உள்ளிட்டவை 3 நாட்களாக கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.