சென்னை: வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும் போது அந்த பகுதிகளில் பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக தமிழகு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கடந்த ஜனவரி 7, 8-ந் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில், ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு …
Read More »‘காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி’ – நடிகர் ரஜினிகாந்த் @ லால் சலாம் இசை வெளியீட்டு விழா
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பேசி இருந்தார். “தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து …
Read More »விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது காலம் கடந்து வழங்கப்பட்டுள்ளது: பிரேமலதா கருத்து
சென்னை: தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு காலம் கடந்து பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது 30-ம் நாள் நினைவு நிகழ்ச்சி நேற்று அனுசரிக்கப்பட்டது. குடியரசு தினம் என்பதால் விஜயகாந்த் நினைவிடம் தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், …
Read More »பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது – விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களே இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்றுமாலை நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். மேலும், மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திருமாவளவனுக்கும், எங்களுக்கும் இருப்பது தேர்தல், அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. பெரியாரையும், அம்பேத்கரையும் …
Read More »இந்தியாவை வலிமையான நாடாக உயர்த்துவோம்: ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிெமாழி ஏற்பு
சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், இந்தியாவை வலிமையான நாடாக உயர்த்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், கோயம்பேட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் …
Read More »வரப்போகும் ஸ்விப்ட் புதிய மாடல்… மார்க்கெட்டே காலியாகப்போகுது..!
புதிய ஸ்விஃப்ட், மார்க்கெட்டை கலக்கும் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசூகி ஸ்விஃப்ட்டின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் புதிய ஸ்விஃப்ட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட், மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை …
Read More »நிலம் அபகரிப்பு.. தலைமறைவான அதிமுக ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவி நீக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை: போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவி நீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான …
Read More »அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுற்றுப்பயணம்
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து, பல்வேறு தரவுகளை பெற்று ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. 05.02.2024 அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
Read More »வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட பத்ம விருது வென்றோருக்கு அன்புமணி வாழ்த்து
சென்னை: “2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் …
Read More »ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பத்திரிகையாளரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, …
Read More »