Breaking News
Home / செய்திகள் (page 105)

செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | 21 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைப்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 …

Read More »

செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்னை? – மருத்துவர்கள் தகவல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையிலும், அதனபின்னர் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும் அவருக்கு புதன்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இதயம் மற்றும் நெஞ்சகம் சாா்ந்த மருத்துவப் பரிசோதனைகள் …

Read More »

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட …

Read More »

10 மசோதாக்கள் நாளை மீண்டும் நிறைவேற்றம்! தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா?

சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தமிழக அரசு தரப்பில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால் அவற்றை ஆளுநர் பல நாட்களாக கிடப்பில் போட்டிருந்தார் என விமர்சனங்கள் …

Read More »

இலங்கை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவு..!!

சென்னை: இலங்கை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முகமது ஷாம். இவர் பீடி, கொட்டை பாக்கு ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி இலங்கையில் இருந்து விமானம் மூலம் வந்த அவரை சென்னை மண்ணடியில் வைத்து மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். தொடர்ந்து தொழிலதிபர் முகமது ஷாமின் மகள் தனது …

Read More »

சென்னையில் தொடரும் வருமான வரித் துறை சோதனை.. வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் ஓனர் வீட்டில் ரெய்டு நிறைவு

சென்னை: சென்னையில் இன்று 2ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே பொதுவாக அமலாக்கத் துறை ரெய்டு, லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு, வருமான வரித் துறை என நடப்பது வழக்கம்தான். அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை பரபரப்பை கிளப்பி வருகிறது. மணல் குவாரி, கல் குவாரி, அரசு ஒப்பந்ததாரர்கள், …

Read More »

கொடிகம்ப பைப் அகற்றிய ஓய்வு அரசு ஊழியர்.. சாதிய ரீதியாக திட்டிய பாஜக மாஜி நிர்வாகி! பாய்ந்த வழக்கு

சென்னை: சென்னையில் பாஜக கொடிக்கம்பத்துக்காக வைத்திருந்த குழாயை அகற்றியதாக தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை சாதிய ரீதியாக திட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை பனையூர் வீட்டின் அருகே 55 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்க அந்த கட்சியினர் முயன்றனர். ஆனால் முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி …

Read More »

வங்கக் கடலில் உருவானது ‘மிதிலி புயல்’ – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றிருப்பதாகவும், நாளை (18.11.23) அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிதிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிதிலி புயல் தற்போது ஒடிசாவின் …

Read More »

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தில் விலை அதிகரித்துள்ளது. :கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு …

Read More »

எம்.டி, பிஎச்.டி இரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டம்: சென்னை ஐஐடி – ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, எம்.டி, பிஎச்.டி ஆகியஇரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை வழங்க புரிந்துணர்வுஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. சென்னை ஐஐடி மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்.டி, பிஎச்.டி ஆகியஇரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு கொண்டுவர உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி …

Read More »