Breaking News
Home / செய்திகள் (page 80)

செய்திகள்

தென் சென்னையில் களமிறங்கும் ஜெயக்குமார் மகன்! நிவாரணப் பணிகளில் ஜெயவர்தன் மும்முரம் காட்டிய பின்னணி!

சென்னை: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மீண்டும் தனது மகன் ஜெயவர்தனை களமிறக்க முடிவெடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதற்கான களப்பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தான் மிக் ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்திக்கவும், அரசு மீதான மக்களின் கோபத்தை தனக்கான வாக்குகளாக அறுவடை செய்யவும் ஜெயவர்தன் சுற்றிச் சுழன்று வருகிறார். வரும் தேர்தலில் …

Read More »

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினி அன்று முதல் இன்று வரை உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அந்த வகையில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை ரஜினிகாந்த்திற்கு கொடுத்தனர். அந்த அளவில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரஜினி. ஆரம்பத்தில் கண்டக்டராக …

Read More »

செங்கை அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து: மின்சார, விரைவு ரயில் சேவை பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே சரக்கு ரயிலில் 10 பெட்டிகள் நேற்று முன்தினம் இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்காரணமாக, மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் சேவை நேற்று பாதிப்படைந்தது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பல விரைவு ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகின. திருச்சிராப்பள்ளி சரக்கு கொட்டகையில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை துறைமுகத்துக்கு இரும்பு மூலக்கூறுகள், உலோக தகடுகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, 42 பெட்டிகளுடன் ஒரு …

Read More »

நிவாரணம் பெறும்போது சிறுமி உயிரிழந்த விவகாரம்: ஆர்டிஓ விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை: அதிமுக சார்பில் மழை வெள்ள நிவாரணம் வழங்கியபோது நெரிசலில் சிக்கி 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் சார்பிலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. கடந்த 9-ம் தேதி அதிமுக சார்பில், வடசென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் …

Read More »

ஆவின் பால் பாக்கெட்களை கால்வாயில் கொட்டியவர்மீது கடும் நடவடிக்கை அவசியம்: பால் முகவர் சங்கம் கோரிக்கை

சென்னை: தாம்பரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்களை கொட்டி வீணாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், தாம்பரம் கழிவுநீர் கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்கள் …

Read More »

சென்னையில் 5 நாட்களில் 35 ஆயிரம் டன் குப்பை அகற்றம்: வெளி மாவட்ட தொழிலாளர்கள் இன்று விடைபெறுகின்றனர்

சென்னை: சென்னையில் மாநகராட்சி சார்பில் கடந்த 5 நாட்களில் 35 ஆயிரம் டன்குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் இன்று விடைபெற்று செல்கின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை மாநகரம் மீண்டு வந்துவிட்ட நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மாநகரின் சில பள்ளிகள் தவிர, பெரும்பாலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், …

Read More »

எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் | அதிமுக ஆர்ப்பாட்டம், மீனவர்கள் மறியல்: கடலை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை

சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அதிமுக மற்றும் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை மணலி பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவிய எண்ணெய் படலம், கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம், திருவொற்றியூர் நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ பகுதிகளில் பரவி, கடலுக்கு சென்று சுமார் 20 கிமீ தூரத்துக்கு பரவியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து …

Read More »

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பதிவான மழையினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். ஆறு அடங்கிய குழுவினர் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையில் இந்த பணி நடைபெற உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கள ஆய்வு செய்த பிறகு தமிழக தலைமை செயலாளருடன் இக்குழு ஆலோசனை …

Read More »

இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு… புதிய அட்டவணை வெளியீடு..!

சென்னை: மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் 36 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டியது . கனமழையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை நின்று சுமார் ஐந்து நாள்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் இன்று …

Read More »

கூடங்குளத்தில் இருந்து தமிழகத்துக்கு எவ்வளவு மின்சாரம் தரப்பட உள்ளது? – விவரம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது தலா 1,000 மெகாவாட் திறனில் 2 அணு உலைகளில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்துக்கு தினமும் 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் விலை ரூ.3.50 முதல் ரூ.4 வரை உள்ளது. அங்கு தலா 1,000 மெகாவாட் திறனில், மேலும் 4 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 3 மற்றும் 4-வது உலை களில் உற்பத்தி செய்யப்பட உள்ள …

Read More »