சென்னை: சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் பயன்பாட்டை பொறுத்து 15%-லிருந்து 25% வரை பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Read More »கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! இனி ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது! கமிஷனர் உத்தரவு
சென்னை: ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான பரிந்துரையை காவல் துறை ஆணையர் சஞ்தீப் ராய் ரத்தோர் செய்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் ஒருவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அவரை போலீஸார் மடக்கி பிடித்த போது அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் …
Read More »வாகன வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற சிஐடியு வலியுறுத்தல்
சென்னை: சாலை வாகனங்களுக்கான வரி உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலர் மற்றும் ஆணையருக்கு தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர் கே.ஆறுமுகநயினார், பொதுச் செயலாளர் வி.குப்புசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: சாலையில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனம்முதல் 20 சக்கர வாகனங்கள்வரையிலான பல்வேறு வகைவாகனங்களுக்கும், கட்டுமானதளவாட வாகனங்களுக்கும்மோட்டார் வாகனப் பதிவு வரி,சாலை வரி, பசுமை வரி, சாலைபாதுகாப்பு …
Read More »சித்தா, ஆயுர்வேதம் படித்தவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு
சென்னை: சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ பதி மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை வழங்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு செப்.8-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2021 நவ.14-ல் மனுவை …
Read More »கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிப்பது அவசியம்: கண் மருத்துவர் மோகன் ராஜன் அறிவுறுத்தல்
சென்னை: கண்களைப் பாதுகாக்க, கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண் மருத்துவர் மோகன் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடித்து மகிழ்வது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். பட்டாசுகளை மிகவும் பாதுகாப்புடன் வெடித்து, தீபாவளியைக் கொண்டாட வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, அதன் துகள்கள் …
Read More »பொது பயன்பாட்டு இடங்களை வகை மாற்றம் செய்ய கூடாது: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை
சென்னை: பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்ட பொது பயன்பாட்டு இடத்தை வகை மாற்றம் செய்வது மற்றும் விலக்கு கோருவதற்கான முன்மொழிவுகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பூங்கா உள்ளிட்ட பொது இடங்கள் பசுமையான சுற்றுச்சூழல் அழகு மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டது மட்டுமின்றி, அப்பகுதியில் …
Read More »அவதூறு பரப்பிய கேரளப் பெண் ரூ.1 கோடியை மான நஷ்டஈடாக வழங்க வேண்டும்: சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் ரூ. 1 கோடியை சம்பந்தப்பட்ட பெண், விஜயபாஸ்கருக்கு மான நஷ்ட ஈடாக வழங்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய ரூ. 14 கோடியில் ரூ. 3 கோடியை மட்டும் திருப்பி அளித்துவிட்டு ரூ.11 கோடியை ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை திருப்பி …
Read More »திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300- ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு …
Read More »“மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலை பேச்சு உதவும்” – கே.எஸ்.அழகிரி
சென்னை: “சமூக நீதியைப் பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. 2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகின்றன” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரை …
Read More »அமர் பிரசாத் ரெட்டி உள்பட பாஜகவினர் 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
சென்னை: பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்தஅக். 20-ம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக, …
Read More »