சென்னை : செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன.8-க்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.