Breaking News
Home / செய்திகள் / இந்திய அணியில் மாற்றம்? சூர்யாவிற்கு பதில் நியூசி போட்டியில் அஸ்வின்? ரோஹித் முடிவிற்கு என்ன காரணம்?

இந்திய அணியில் மாற்றம்? சூர்யாவிற்கு பதில் நியூசி போட்டியில் அஸ்வின்? ரோஹித் முடிவிற்கு என்ன காரணம்?

சென்னை: நாளை நடக்க உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் வரை சென்றது. செமி பைனலில் சென்று இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்தது.

அந்த சீசனில் வரிசையாக போட்டிகளில் வென்றும் கூட இந்தியா செமி பைனலில் தோல்வி அடைய காரணம் கோலி – சாஸ்திரி செய்த ஒரு தவறுதான். அது பிளேயிங் லெவனில் சொதப்பியது. அடிக்கடி பிளேயிங் லெவனை மாற்றியது.

அணியில் மாற்றம் இல்லை: ஆனால் இந்த சீசனில் இந்திய அணியில் மற்றம் செய்யப்படவே இல்லை. இந்திய அணியில் லீக் போட்டிகளில் கடைசி ஆட்டத்தில் நடந்த போட்டிகளில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்திய அணி செமி பைனலுக்கு தேர்வாகிவிட்டது. இப்படி இருக்க இந்திய அணி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து டெஸ்ட் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உதாரணமாக மிடில் ஆர்டரில் இஷான் கிஷனை இறக்கி சோதனை செய்யலாம். அதே சமயம் அணிக்குள் அஸ்வினை கொண்டு வரலாம். மிடில் ஆர்டரில் சூர்யா குமார் யாதாவிற்கு ஓய்வு கொடுக்கலாம். ஸ்பின் பவுலிங்கில் குல்திப் யாதாவிற்கு ஓய்வு கொடுக்கலாம். இதன் மூலம் அஸ்வினை கொண்டு வரலாம்.

ஏனென்றால் குல்தீப் எல்லாம் முதல் போட்டியில் இருந்து ஆடி வருகிறார். கிட்டத்தட்ட 7 போட்டிகளாக ஆடிக்கொண்டு இருக்கிறார். இதனால் அவருக்கும் ஓய்வு அவசியம். இல்லையென்றால் கூடுதல் பவுலிங் தேவைப்பட்டால் அஸ்வினை உள்ளே கொண்டு வந்து சூர்ய குமார் யாதவை நீக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அஸ்வின் உள்ளே வருகிறார்: இந்த நிலையில்தான் நாளை நடக்க உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சூர்யா குமார் யாதவிற்கு பதிலாக அவர் அணிக்குள் வரலாம் என்று கூறப்படுகிறது.

அணியில் கூடுதல் பவுலிங் ஆப்ஷன் தேவை என்று இவர் எடுக்கப்படுகிறார். முக்கியமாக 5 பவுலர்கள் இருக்கிறார்கள். அதில் 3 பாஸ்ட் பவுலர்கள் உள்ளனர். ஆனால் 2 ஸ்பின் பவுலர்கள்தான் உள்ளனர். கோலி, ரோஹித் போன்றவர்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக பவுலிங் போட களமிறக்க முடியாது. அப்படி இருக்க கூடுதலாக ஒரு பவுலர் தேவை.

இதில் அஸ்வினை அணியில் எடுக்க வேறு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டரில் 4 லெப்ட் ஹேண்ட் வீரர்கள் உள்ளனர். அந்த லெப்ட் ஹேண்ட் வீரர்களின் விக்கெட்டை எடுக்க அஸ்வின் தேவை. இதனால் அஸ்வினை உள்ளே கொண்டு வர ரோஹித் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அணிக்குள் அஸ்வின் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அஸ்வின் வந்தால் சிக்கல்: ஆனால் அஸ்வின் வந்தால் பேட்டிங்கில் பெரிய சிக்கல் ஏற்படும். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பலம் குறையும். அதிலும் நியூசிலாந்து பவுலிங்கிற்கு எதிராக நல்ல பேட்டிங் ஆர்டர் தேவை என்பதால் இந்த முடிவு அணிக்கு எதிராக மாறலாம்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *