சென்னை: தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு, ரிடையர் ஆன நிலையில், புது அத்தியாயத்தை கையில் எடுத்துள்ளார்..
இதையடுத்து, தமிழக மக்களின் கவனத்தையும் தன்மீது குவித்து வருகிறார்.
டிஜிபியாக பதவியேற்றதில் இருந்தே, எத்தனையோ அதிரடிகளை கையில் எடுத்தவர் சைலேந்திர பாபு.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிக தீவிரமாக பணியாற்றியவர்.
அன்று, பதவியேற்றதுமே இவர் 2 முக்கிய விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.. ஒன்று, தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்குவது, மற்றொன்று குழந்தைகள் கடத்தலை ஒழிப்பது..
அதன்படியே, ஆக்ஷனிலும் இறங்கினார்.. குழந்தைகள் கடத்தல் கும்பல்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார்.. அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் அதிரடியாக கைது செய்தார்.. இந்த விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சைலேந்திர பாபுவை கூப்பிட்டு பாராட்டியதாக செய்திகளும் கசிந்திருந்தன.
முட்டுக்கட்டை: இதற்கு பிறகு, ஓய்வு பெற்ற நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை நியமிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இதற்கு ஆளுநர் தரப்பில் முட்டுக்கட்டை போடுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்தவாறே உள்ளன.
பாத்துரலாமா? தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு யூடியூபர் அவதாரம்.. வெளியான மிரட்டலான டீசர்
எனினும், நேர்மையான அதிகாரி என்ற பெயரை பெற்றுள்ளதுடன், பெரிதாக சர்ச்சைகளிலும் சிக்காதவராக உள்ளார் சைலேந்திர பாபு.. இந்நிலையில், திடீரென ஒரு சேலஞ்சை பொதுமக்களுக்கு விடுத்துள்ளார்..
புது சேனல்: இவர் சொந்தமாக “சைலேந்திரபாபு 2.0” என்ற யூடியூப் சேனலை தொடங்கியிருக்கிறார்.. இந்த சேனலில், தான் இதுவரை காவல்துறையில் சந்தித்த சவால்கள், சிக்கல்கள் உள்ளிட்டவற்றை அனுபவமாக, இந்த சேனலில் பகிர்ந்து கொள்ளவும் போகிறார். அதுமட்டுமல்ல, மாணவர்களுக்காக பலமுறை உற்சாகமூட்டும் வகையில் பேசும், இவரது மோடிவேஷனல் பேச்சுக்கள் மிகவும் பிரபலம் என்பதால், அவரது இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது.
“பாத்துரலாமா?” என்று முதல் வீடியோவை பேசி, யூடியூப் நேயர்களை கவர்ந்த நிலையில், இதோ இப்போது இன்னொரு 2 வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில், 100 நாட்கள் சேலஞ்சுக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
100 நாள் சவால்: இதுகுறித்து சைலேந்திர பாபு அந்த வீடியோவில் பேசும்போது, “அடுத்தடுத்து 100 நாட்கள், 10 கிலோமீட்டர் தூரத்துக்கு நாம் இனி ஓடப் போகிறோம். இதற்கு 100 கி.மீ சேலஞ்ச் என்று பெயர் வைத்து கொள்வோம்.. 100 நாட்கள் முடிந்ததுமே, மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொண்டாடி விடுவோம். தமிழ்நாடு முழுமையிலிருந்துமிருந்தும், 10 லட்சம் பேர் இந்த சேலஞ்சில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது என்ன சாப்பிடுகிறோர்களா, அதையே தொடருங்கள்..
காரணமே இல்லாமல், பலரும் ஓடிக்கொண்டிருப்பார்கள். நடந்து கொண்டேயிருப்பார்கள். இப்படி நடப்பதால், உடல்நலன் மிகவும் மேம்படும்… இதயம் தொடர்பான பிரச்சினைகளும் வராது. வாரத்திற்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்து கொள்வோம்..
சேலஞ்ச்: முதலில் ஒரு கிலோமீட்டர் வீட்டிலேயே நடங்கள். 2வது வாரம், 2 கிலோமீட்டர் தூரம் நடங்கள்.. 3வது வாரம், 3 கிலோமீட்டர் தூரம் நடங்கள்.. கடைசியில் டிசம்பர் 1-ம்தேதி அடுத்தகட்டமாக பார்த்து கொள்வோம்.. ” என்று சைலேந்திர பாபு அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார். உடல்நலன் குறித்த விழிப்புணர்வு சேலஞ்சை, சைலேந்திர பாபு விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.