சென்னை: கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் …
Read More »தீபாவளி | தமிழகம் முழுவதும் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள்
சென்னை: “தீபாவளி தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை …
Read More »“இனி மாதம் 2 ஆயிரம் மிச்சம்” . முதல்வர் அறிவிப்பால் குஷியான பொதுமக்கள்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாவலூர் சுங்கச்சாவடி சுங்கக் கட்டணத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் பலரும் வரவேற்றுள்ளனர். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஆட்சியர்களுடன் நடைபெற்ற கள ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இது தென்சென்னை பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான …
Read More »11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 11மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (நவ. 8, 9) …
Read More »“மீண்டும், மீண்டும் சொல்கிறேன்…” – தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: “தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 69%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்து, அதற்கேற்ற விகிதத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிஹார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அறிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ‘நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த …
Read More »அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கையை முன்வைத்து பிப்ரவரியில் டெல்லியில் இயக்கம்: மாநில அரசு ஓய்வூதியர்கள் சம்மேளன மாநாட்டில் முடிவு
சென்னை: அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்தின் முதலாவதுஅகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை அகில இந்திய மாநிலஅரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு ஓய்வூதியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தூல் தலைமை வகித்தார். அ.சவுந்தரராஜன் வர வேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘நாட்டில் நிலவி வரும் பொருளாதார, சமூக, அரசியல் சூழல் குறித்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அரசமைப்புச் …
Read More »குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை: “குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள், 80 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்” என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 மற்றும் 2அ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் …
Read More »தீபாவளிப் பண்டிகை | பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க 19 அறிவுரைகளை வெளியிட்டது சென்னை காவல்துறை
சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கனம் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. Expand அதன்பேரில், வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் …
Read More »தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இன்று (நவ.7) முதல் …
Read More »மறுகட்டுமான திட்டத்தில் 21 இடங்களில் ரூ.1330 கோடியில் 7,724 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை: மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் 21 திட்டப் பகுதிகளில் ரூ.1,330.43 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது: வாரியத்தின் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 30 …
Read More »