சென்னை : மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் DD …
Read More »9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை வழங்கி தமிழக அரசு ஆணை வெளியீடு..!!
சென்னை: 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஒன்பது கூட்டுறவு மற்றும் ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு சம்பள நிலுவைத் தொகை , இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு ரூ.63.61 கோடி வழிவகை முன்பணக் கடன் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் …
Read More »பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
சென்னை: தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக்கருத்தில் கொண்டு …
Read More »வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று (நவ.08) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ.09) அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை …
Read More »தமிழகத்தில் சாலை வாகனங்களுக்கான வரி உயர்வு அமலுக்கு வந்தாச்சு.. உச்சாணிக்கு உயர்ந்த பைக், கார் விலை
சென்னை: தமிழகத்தில் சாலை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.. அதுபோலவே, சரக்கு வாகனங்களுக்கு சுமைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்கும் வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.. இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சொல்வதென்ன? வாகன விற்பனையாளர்கள் சொல்வதென்ன? தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. வந்தது அரசாணை: அதில், “வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி …
Read More »தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை பொறுத்தே தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்படும் என தகவல்
சென்னை: தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தபடுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவனையை பொறுத்து தேர்தல் அட்டவனை இருதி செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்ககூடிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தின் 3-வது வாரத்தில் முடிவடையும். அந்த வகையில் தேர்வு பணிகள் முடிவடைந்தவுடன் தமிழகத்தில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு உண்டான அறிவிப்பும், தேர்தலுகான …
Read More »சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், …
Read More »நியாய விலை கடைகளில்.. நியாயம் கிடைக்க போகுதே.. ரேஷனுக்கு போன முக்கிய உத்தரவு.. நோட் பண்ணுங்க
சென்னை: ரேஷன் கடைகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள், பிரச்சனைகள் தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் …
Read More »சனாதன ஒழிப்பு- எந்த ஆய்வு மூலம் பேசினீங்க? பேச்சை தாக்கல் செய்யுங்க- உதயநிதிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: சனாதன தர்மம் குறித்து எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பேசப்பட்டது? சென்னை கருத்தரங்கில் பேசியது என்ன? என்கிற விவரங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதன தர்ம ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் சேகர்பாபு தரப்பில், ஒரு இந்துவாக பெருமைப்படுகிறேன். …
Read More »அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை: அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக அரசு செலவில் கட்டித் தரப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னர் தாம்பரம் வட்டத்திலும் பிறகு, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பிரித்து இரண்டு மாவட்டங்களாக …
Read More »