Breaking News
Home / தகவல்கள் (page 18)

தகவல்கள்

மழை தீவிரம்.. 14 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மாநில பேரிடர் மேலாண்மைத்துறை!

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பருவமழை சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை …

Read More »

மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்! செந்தில் பாலாஜிக்கு 3 துறை மருத்துவர்கள் இன்று சிகிச்சை!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிசோதனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அவர் திடீரென கடந்த 15 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் தேதி புழல் சிறையில் அமைச்சர் …

Read More »

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.7 முதல் அரையாண்டு தேர்வு

சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோன்று, 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் …

Read More »

ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா: 4 புதிய திட்டங்களை அமைச்சர் மஸ்தான் தொடங்கிவைத்தார்

சென்னை: ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழாவில், 4 புதிய திட்டங்களை தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், வங்கியின் முதன்மை பொது மேலாளர் என்.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் …

Read More »

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை – கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

சென்னை: சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.26, டிச.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயத்தை அடையும். கோட்டயத்தில் இருந்து நவ.27, டிச.4, 11, 18, …

Read More »

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கான எழுத்து தேர்வு: சென்னை உட்பட 10 இடங்களில் நடந்தது

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் …

Read More »

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிப்பு ஒரே நாளில் சவரன் ரூ.520 எகிறியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஜெட் வேகத்தில் அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை கண்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.360 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.45,800க்கும் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகை மற்றும் விலை குறைவு …

Read More »

சொகுசு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தலாம்: போக்குவரத்து ஆணையர் உத்தரவு

சென்னை: சொகுசு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதித்தும், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு ஆயுள் வரி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும்போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் ஆயுள் வரியை 15, 20 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒருமுறை செலுத்தினால் போதுமானது. அதுவே வணிகரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு காலாண்டு அல்லதுஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், அண்மையில் மோட்டார் வாகன வரிகளை …

Read More »

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட …

Read More »

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யாதோரும் கூட்டுறவுத்துறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

சென்னை: கூட்டுறவுத்துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 32 தேர்வர்களுக்கு சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணியாணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டுறவுத்துறையில் ஏற்கெனவே 38 மாவட்டங்களில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 5,500 காலிப்பணியிடங்களை நிரப்ப 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்முகத் …

Read More »