சென்னை: “வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இல்லங்களில் பொங்கல் திருநாளை ஓரளவு மகிழ்ச்சியுடனாவது கொண்டாட அரசு வழிவகை செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் …
Read More »மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜன.8-ல் சென்னையில் ஆலோசனை!
சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜன.8ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி வருகிற மே மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மே மாத தொடக்கத்திலோ, இறுதியிலோ நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 2024-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மக்களவைக்கான 17வது தேர்தலாகும். …
Read More »247 தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை : தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்தக் குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி பகுதியில் 2 …
Read More »நுங்கம்பாக்கம், சூளைமேட்டில் பல்லாங்குழி சாலைகள்: நாள்தோறும் கடும் சிரமத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கத்தில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இந்தப்பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கக்கடலில் உருவான “மிக்ஜாம்” புயல் கடந்த 4-ம் தேதி சென்னை அருகே நெருங்கி வந்தது. அப்போது பெய்த கனமழையால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. …
Read More »எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …
Read More »டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை: தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஜனவரி 06, 07 ஆகிய நாட்களில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். …
Read More »பன்னாட்டு புத்தகக் காட்சியில் 38 நாடுகள் பங்கேற்பு
சென்னை: சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து மடலை வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது: தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதேநேரம் 47-வது புத்தகக் காட்சி பெரும் வெற்றியை பெற எனது வாழ்த்துகள். பபாசிக்கு பாராட்டுகள். இந்தாண்டு பன்னாட்டு புத்தகக்காட்சி சென்னையில் ரூ.6 கோடியில்ஜன. 16, 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் 38 நாடுகள் பங்கேற்க உள்ளன. …
Read More »குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
சென்னை: குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தின விழா வரும் 26-ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர்ஆர்.என்.ரவி ஏற்றிவைக்கிறார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். முப்படைகள், காவல் துறையின் …
Read More »டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை: டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இபிஎஸ் ராஜினாமா செய்யும் வரை உரிமை காக்கும் யுத்தம் தொடரும். சசிகலா விரும்பினால் நிச்சயம் அவரை சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் …
Read More »பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு! என்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கும்
சென்னை: இந்தாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் பொங்கல் …
Read More »