Breaking News
Home / தகவல்கள் (page 20)

தகவல்கள்

”தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது” – அன்புமணி

சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் 2025-ஆம் ஆண்டிலும் செயல்படுத்தக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று கடந்த …

Read More »

10-ம் வகுப்புக்கு மார்ச் 26, 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ல் பொதுத் தேர்வு தொடக்கம்: கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். அதன்படி 10ஆம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு …

Read More »

போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணையவழியில் நுழைவு அனுமதிச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஓட்டுநர்-நடத்துநர் பதவிக்குஇணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களுக்கும் நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் www.arasubus.tn.gov.in என்ற …

Read More »

டெண்டர் பிரச்சினையால் காலி கோணிப்பைகள் தேக்கம்: நியாயவிலைக் கடைகளில் இடப்பற்றாக்குறை

சென்னை: டெண்டர் பிரச்சினையால் நியாயவிலைக் கடைகளில் லட்சக்கணக்கில் காலி கோணிப்பைகள் தேங்கிஉள்ளன. கடைகளில் கோணிப்பைகள் இருப்பதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் 2.24 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34,793 நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நியாயவிலைக்கடைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு …

Read More »

சென்னை – திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை: பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே நவம்பர், டிசம்பர்ஆகிய மாதங்களில் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் அண்மையில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர்-திருநெல்வேவி இடையே வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. …

Read More »

கனமழை எச்சரிக்கை – கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு அமைச்சர்களை அனுப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார். அப்போது, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களில் …

Read More »

தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

Read More »

கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், நாளை (நவ.14, செவ்வாய்க்கிழமை) கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் …

Read More »

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அடையாறு ஆற்றின் கீழே 70 அடி ஆழத்தில் இம்மாத இறுதியில் சுரங்கப்பணி தொடங்கும்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் அடையாறு ஆற்றின் கீழே 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ.) வரையிலான 3-வது வழித்தடம் …

Read More »

அரசு வழக்கறிஞர்களை சந்திக்க வரும் போலீஸாரை மரியாதையுடன் நடத்த வேண்டும்: தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை வழக்கு நிமித்தமாக சந்திக்க வரும் போலீஸ் அதிகாரிகளை மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அனுப்பியுள்ள …

Read More »