Breaking News
Home / தகவல்கள் (page 14)

தகவல்கள்

திமுகவுக்கு தித்திக்கும் செய்தி.. நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்துக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திமுக முன்னெடுத்த கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவப் படிப்புகளுக்காக மத்திய அரசு நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்து உயிரிழந்து வரும் நிலையில் அதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் ‘நீட் …

Read More »

யானைப்பசிக்கு சோளப்பொறி!: சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒன்றிய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.3273 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது திட்டமதிப்பில் வெறும் 5% மட்டுமே. குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான …

Read More »

பொறியாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முற்றிலுமாக திரும்பவில்லை. இந்த மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் …

Read More »

மாநில அளவில் உணவுத் துறை செயலர் தலைமையில் நேரடி விற்பனையாளர் முகவர்களை கண்காணிக்க ஆணையம்

சென்னை: மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது மின் வணிகம் மற்றும்நேரடி வணிகத்தில் நியாயமற்ற வணிகநடவடிக்கைளில் இருந்தும் வாடிக்கையாளர்களை காப்பது, வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்றபல்வேறு அம்சங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நேரடி வணிகம் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநில அரசும், நேரடிவிற்பனை முகமைகள், நேரடி விற்பனையாளர்களை கண்காணிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை நிறைவேற்றும் வகையில் உணவுத்துறை செயலர் தலைமையில் …

Read More »

சென்னையில் ஜன. 7, 8-ல் உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: சென்னையில் ஜனவரி 7, 8 -ம் தேதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இணையும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி …

Read More »

புத்தாண்டு: சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மெரினா கடற்கரை உட்புற சாலை வரும் 31-ந்தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ம் தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவத்துக்காக …

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 99-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது பிறந்தநாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக சார்பில் ஆர்.ராசா எம்.பி. உள்ளிட்டோர் நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக …

Read More »

வேகமாக பரவும் புதிய கரோனா வைரஸ்: சென்னை, கோவையில் பரிசோதனைகள் அதிகரிப்பு

சென்னை: புதிய வகை கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று அலைகளாக பரவி பல லட்சம் பேருக்குபாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள், கடந்த ஓராண்டாகத்தான் கரோனாவின் அச்சத்திலிருந்து மீண்டெழுந்துள்ளனர். இத்தகைய சூழலில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் …

Read More »

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் என 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார், மதுரை திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி விஜயகுமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுன் சரக உதவி ஆணையர் …

Read More »

தமிழத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் (இன்று) 23.12.2023 தமிழகத்தில் ஓரிரு …

Read More »