Breaking News
Home / செய்திகள் (page 29)

செய்திகள்

பட்டியலின அமைச்சரை அவமதித்தாரா திமுக எம்.பி டி.ஆர்.பாலு? – மக்களவை சலசலப்பும் பின்னணியும்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியதை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின அமைச்சரை அவமானப்படுத்திவிட்டதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைக்கிறது. உண்மையில் டி.ஆர்.பாலு பேசியது என்ன? – மக்களவை சலசலப்பையும் பின்னணியையும் சற்றே விரைவாகப் பார்ப்போம். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இயற்கைப் பேரிடர் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து திமுக, மதிமுக உறுப்பினர்கள் பேசினர். அப்போது மத்திய …

Read More »

2400 கோடி ரூபாய். 14 ஆயிரம் வீடுகள்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.!

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, யானை கவுனி பகுதியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன. இந்த குடியிருப்புகளை இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 1970ஆம் ஆண்டு தமிழக் அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. …

Read More »

விதிமீறும் கோரமண்டல் நிறுவனத்தை அனுமதிக்க முடியாது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி

சென்னை: விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்க முடியாது என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதியளித்துள்ளது. அமோனியம் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது. கோரமண்டல் தொழிற்சாலை அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் தீர்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.

Read More »

“நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிக்கு முழு ஆதரவு” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச …

Read More »

25 பொறியியல் கல்லூரிகளை மூட நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் 25 பொறியியல் கல்லூரிகள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அவை மூடப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தமிழக உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிதிப் பற்றாக்குறை நாடு முழுவதும் உள்ளது. பல்கலைக்கழகங் களைப் பொறுத்தவரை சிலவற்றில் பற்றாக்குறை உள்ளது. சிலவற்றில் நிதி அதிகமாக உள்ளது. பாரதியார், அண்ணா பல்கலைக்கழகங்களில் …

Read More »

திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நிறைவு: வேறுபாடுகளை மறந்து கட்சியினர் பணியாற்ற அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் வகையில் 70 நாட்களும் வேறுபாடுகளை மறந்து பணியாற்றும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி ஒருங்கிணைப் புக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். திமுக சார்பில் நடந்துவந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்,கட்சிப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான …

Read More »

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஜனவரி வரை ரூ.953 கோடி கூடுதல் வருவாய்: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: கடந்தாண்டு ஜனவரி வரையிலான காலத்தை ஒப்பிடும்போது இந்தாண்டு ஜனவரி வரை பதிவுத்துறையில் ரூ.952.86 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், கடந்த ஜனவரி மாதத்துக்கான பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழக அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த …

Read More »

இன்று ஸ்ட்ரைக்.. ஸ்டெர்லைட்போல் பெரிதாகும் எண்ணூர் ரசாயன ஆலை எதிர்ப்பு! ஆக்சனில் 33 கிராமங்கள்

சென்னை: எண்ணூரில் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி இன்று 33 கிராமங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அமைந்து உள்ளது கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் ரசாயன தொழிற்சாலை. வேளாண்மைக்குத் தேவையான ரசாயண உரத்தை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவன ஆலையில் இருந்து கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. …

Read More »

வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுக போராடும்: கருத்து கேட்புக் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் உறுதி

சென்னை: அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மண்டல வாரியாக சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்டு, அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டல அளவிலான பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் சென்னை வானகரம் அடுத்த வேலப்பன்சாவடியில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக …

Read More »

நெருங்கும் மக்களவை தேர்தல்.. சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்!

சென்னை: சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் …

Read More »