Breaking News
Home / செய்திகள் (page 19)

செய்திகள்

ரூ.15.34 கோடியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்,ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (பிப்.17) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், ரூ.15 …

Read More »

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை இதுவரை தொடங்கவில்லை. ஆனால், திமுகவில் கூட்டணிக் கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 25-க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய திமுக நினைக்கிறது. ஆனால் விசிக, மதிமுக கட்சிகளும் மநீம கட்சியும் தங்களது சொந்த சின்னங்களில் போட்டியிட விரும்புகின்றன. இந்த சூழலில் பட்ஜெட் கூட்டம் முடிந்த பின் கூட்டணி தொகுதி பங்கீட்டை …

Read More »

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தெலங்கானாவில் சமூகநீதியை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தெலங்கானாவில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை …

Read More »

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? – பதிலளிக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், உண்மை நிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது …

Read More »

குழந்தை கடத்தல் வதந்தி; சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!

சென்னை: சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான காணொலிகள் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், …

Read More »

 ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

CM Stalin: பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டி டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் விழா: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் …

Read More »

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதுவை கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்ற உடலுக்கரு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் என தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை …

Read More »

மேகேதாட்டுவில் அணை கட்ட தயாராகும் கர்நாடகா: தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்டத் தயாராகும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதி தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில முதல்வரால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மேகேதாட்டு அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே தனியாக …

Read More »

ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. இந்திய வானிலை …

Read More »

கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் சட்டப்பேரவையில் பதிலளித்தனர். இந்நிலையில் போக்குவரத்து …

Read More »