Breaking News
Home / செய்திகள் (page 11)

செய்திகள்

“திமுகவை குறை சொல்ல மோடிக்கு எந்தத் தகுதியும் இல்லை” – ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி மடல் எழுதியுள்ளார். அதில், “முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் உங்களின் ஒருவனான நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நாளெல்லாம் திட்டங்கள்; பொழுதெல்லாம் சாதனைகள்; அதனால் பயன்பெறும் மக்களின் வாழ்த்துகள் …

Read More »

இடை நிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களால் கேள்விக்குறியாகும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் – பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண தேவையான …

Read More »

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். உயர்கல்வியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும், எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் …

Read More »

“திருப்தி ஏற்படுகிற அளவில் திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சென்னை: “தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் எல்லாம் நல்லபடியாக நடக்கும். எங்களுக்கு திருப்தி ஏற்படுகிற அளவில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஆகியிருக்கிறது.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சுப்பராயன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொண்டது. பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் …

Read More »

பொருளியல், புள்ளியியல் துறை பணியாளர்கள் பதவி உயர்வில் இறையன்பு பரிந்துரையை ஏற்கவும்: ராமதாஸ்

சென்னை: புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய பரிந்துரையை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் அனுப்பியும் அதன் மீது இதுவரை முடிவெடுக்காமல் …

Read More »

திமுகவின் 10 ஆண்டுகால விடாமுயற்சியால் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது :எம்.பி. கனிமொழி பெருமிதம்

சென்னை : குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திட வேண்டும் என்ற கலைஞரின் கனவு நனவாகியுள்ளது என தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த திமுக எம்.பி.கனிமொழி, “நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என 2013ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கலைஞர் கடிதம் எழுதியிருந்தார். தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்திப்பு என …

Read More »

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 …

Read More »

வருவாய்த் துறையினரின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுக: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் அரசு நிர்வாகமும், மக்கள் சேவையும் பாதிக்கப்படும் நிலையில், அவர்களின் …

Read More »

“8 மாதம் சிறையில் இருப்பதால் செந்தில்பாலாஜி மீதான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்” : உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம் …

Read More »

திமுக நிர்வாகிகள் திடீர் மாற்றம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் முக்கிய அறிவிப்பு..!

சென்னை: சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தனது உடல் நலக்குறைவு காரணமாக தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார். எனவே, கட்சிப்பணிகள் செவ்வனே நடக்க பெரம்பலூர் வீ.ஜெகதீசன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார். அதேபோல், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் …

Read More »