Breaking News
Home / செய்திகள் (page 111)

செய்திகள்

கூர்நோக்கு இல்லங்களின் மேம்பாடு தொடர்பான 500 பக்க அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு: மனநல ஆலோசகரை நியமிக்க நீதிபதி சந்துரு குழு பரிந்துரை

சென்னை: கூர்நோக்கு இல்லங்கள் தொடர்பான 500 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு குழு அளித்தது. இத்தகைய இல்லங்களை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி இயக்குநரகத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் முழுநேர மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 டிசம்பரில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி ரிலே பாக்ஸை திருடியதாக மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவனை ரயில்வே …

Read More »

எண்ணூரில் 2000 மெகாவாட் திறனில் எரிவாயு மின்நிலையம் அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு எண்ணூரில் 450 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் இருந்தது. இதன் ஆயுட் காலம் முடிவடைந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிரந்தரமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. புதிதாக 2 ஆயிரம் மெகாவாட் திறனில் எரிவாயு மின்நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. மேலும், மின்நிலையம் அமைப்பதற்கானவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிதனியார் நிறுவனத்திடம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அந்நிறுவனம் கடந்த மார்ச் …

Read More »

கனமழை எச்சரிக்கை – கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு அமைச்சர்களை அனுப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார். அப்போது, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களில் …

Read More »

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த முடிவு

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதிதாகவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ரவுடி கருக்கா வினோத் மீது வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்.25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நந்தனம் எஸ்.எம். நகரை சேர்ந்த பிரபல …

Read More »

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை: களப்பணியில் 23 ஆயிரம் பணியாளர்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மாநகராட்சியின் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நேற்று காலைமுதல் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரிநல்லா கால்வாயில் மழைநீர் வெளியேற்றும் பணியை மாநகராட்சி மேயர்பிரியா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். …

Read More »

கூட்டுறவு துறையில் 2257 பணியிடம்! நேரடி விண்ணப்பம் ஏன்? டவுட் வருதே.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கின்ற நிலையில், அவர்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல், எதற்காக கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கு நேரடி விண்ணப்பம் கோரப்படுகிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் என மொத்தம் 2,257 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் …

Read More »

தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

Read More »

கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், நாளை (நவ.14, செவ்வாய்க்கிழமை) கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் …

Read More »

கைகூப்பி வணங்கி முன்னாள் பிரதமர் நேருவுக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி.. உடன் திமுக அமைச்சர்கள்!

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாளையொட்டி, தமிழக ஆளுநர், அமைச்சர்கள், நேரு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நேருவின் நேருவின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை …

Read More »

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அடையாறு ஆற்றின் கீழே 70 அடி ஆழத்தில் இம்மாத இறுதியில் சுரங்கப்பணி தொடங்கும்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் அடையாறு ஆற்றின் கீழே 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ.) வரையிலான 3-வது வழித்தடம் …

Read More »