சென்னை: சென்னையில் மழை, வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் …
Read More »எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …
Read More »டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை: தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஜனவரி 06, 07 ஆகிய நாட்களில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். …
Read More »டெஸ்லா போட்டியாளர்.. சென்னைக்கு வர இருந்த வின்பாஸ்ட்.. தென் தமிழ்நாட்டிற்கு அனுப்பிய தமிழ்நாடு அரசு!
சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம். டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும். இப்போது இ …
Read More »தமிழை பொய்யாக புகழ்கிறார் பிரதமர் மோடி: கே.எஸ்.அழகிரி விமர்சனம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் நடந்த விழாவில் பேசிய பிரதமர், வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியுள்ளார். ஆனால், தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிதி ஒதுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக அரசு அமைந்த கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அதை …
Read More »பன்னாட்டு புத்தகக் காட்சியில் 38 நாடுகள் பங்கேற்பு
சென்னை: சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து மடலை வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது: தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதேநேரம் 47-வது புத்தகக் காட்சி பெரும் வெற்றியை பெற எனது வாழ்த்துகள். பபாசிக்கு பாராட்டுகள். இந்தாண்டு பன்னாட்டு புத்தகக்காட்சி சென்னையில் ரூ.6 கோடியில்ஜன. 16, 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் 38 நாடுகள் பங்கேற்க உள்ளன. …
Read More »பாஜக அகில இந்திய தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக ஓபிஎஸ் தகவல்
சென்னை: பாஜக அகில இந்திய தலைமையுடன் தொடர்பில் இருப்பதாகவும் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜெயலலிதாவின் மறைவுக்குபிறகு, அவரின் தியாகத்துக்காக அவருக்கு நிரந்தர பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதயத்தில் ஈரம் இல்லாமல், அந்த தீர்மானத்தை ரத்து செய்து, அதிமுக …
Read More »போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சு தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஜன.9-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை …
Read More »குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
சென்னை: குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தின விழா வரும் 26-ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர்ஆர்.என்.ரவி ஏற்றிவைக்கிறார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். முப்படைகள், காவல் துறையின் …
Read More »டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை: டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இபிஎஸ் ராஜினாமா செய்யும் வரை உரிமை காக்கும் யுத்தம் தொடரும். சசிகலா விரும்பினால் நிச்சயம் அவரை சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் …
Read More »