Breaking News
Home / செய்திகள் (page 56)

செய்திகள்

புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தென்னை நார் சார்ந்த தொழில் வளர்ச்சிக்காக புதிய கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், `தென்னை நார் கொள்கை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்த்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் …

Read More »

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஜன. 8, 9-ல் ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில் வரும் ஜன. 8, 9-ம்தேதிகளில், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், …

Read More »

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடியில் மகளிர் விடுதி: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்துக்கு அருகில் தரமான, பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அவசிய தேவையாக உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை உணர்ந்த தமிழக …

Read More »

தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் நேரடி நியமனம்

சென்னை: தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் …

Read More »

அரிசி ஆலை மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை

சென்னை: அரிசி ஆலைகளுக்கான மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்என்று அரிசி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு மற்றும் நெல், அரிசி டீலர் சங்க செயலாளர் ஏ.சி.மோகன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு மோட்டா ரக நெல் விலை 100 கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 40 என நிர்ணயிக்கப்பட்டது. இதை மத்திய அரசுகடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 183 …

Read More »

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்: இபிஎஸ்

சென்னை: “வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இல்லங்களில் பொங்கல் திருநாளை ஓரளவு மகிழ்ச்சியுடனாவது கொண்டாட அரசு வழிவகை செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் …

Read More »

அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்து அறிவிப்பு: கட்டணங்களை குறைக்க கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு வழிகாட்டு மதிப்பு, தமிழகத்தில் 3 லட்சம் சாலை மற்றும் தெருக்களுக்கு நிர்ணயம் செய்து பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான பத்திரப்பதிவில் புதிய நடைமுறை கடந்த டிச.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பிரிக்கப்படாத பகுதி மற்றும் கட்டிடத்தின் விலை அடிப்படையில் கூட்டு மதிப்பு நிர்ணயப்படி பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால், கூட்டு மதிப்பு தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற்ற …

Read More »

மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜன.8-ல் சென்னையில் ஆலோசனை!

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜன.8ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி வருகிற மே மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மே மாத தொடக்கத்திலோ, இறுதியிலோ நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 2024-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மக்களவைக்கான 17வது தேர்தலாகும். …

Read More »

247 தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்தக் குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி பகுதியில் 2 …

Read More »

நுங்கம்பாக்கம், சூளைமேட்டில் பல்லாங்குழி சாலைகள்: நாள்தோறும் கடும் சிரமத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கத்தில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இந்தப்பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கக்கடலில் உருவான “மிக்ஜாம்” புயல் கடந்த 4-ம் தேதி சென்னை அருகே நெருங்கி வந்தது. அப்போது பெய்த கனமழையால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. …

Read More »