சென்னை: ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவதற்கான வங்கி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் …
Read More »“எதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள்?” – இபிஎஸ் வழக்கில் ஐகோர்ட் கேள்வி
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் எதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள …
Read More »திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியல், போராட்டம்: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வராததால் விரக்தி @ சென்னை வெள்ளம்
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இம்மழையால் மாநகரில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதில் நேற்றைய நிலவரப்படி 384 இடங்கள் மற்றும் 6 சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் வடியவில்லை. நீரை வெளியேற்ற 1,068 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதியில் 73 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் 12 ஆயிரத்து 355 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், …
Read More »புயல் பாதிப்பு | சைதாப்பேட்டை மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரிசி, பெட் சீட், பால், பிஸ்கேட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வழங்கினார். மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதிகனமழை ஓய்ந்தபோதிலும், அதன் பாதிப்புகள் இன்னும் வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளை விட்டுச் செல்லவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் ஐந்தாவது நாளாக சில …
Read More »மிக்ஜாம் புயல் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பமா?- தொண்டு நிறுவனங்களுக்கான ‘வாட்ஸ் அப்’ எண் வெளியீடு
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் …
Read More »“டிலைட் பாலை திணிக்கிறது ஆவின்” – அன்புமணி கண்டனம்
சென்னை: டிலைட் பாலை திணிப்பதை விடுத்து, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களை வழக்கமான அளவில் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் இயல்பு …
Read More »மிக்ஜாம் புயல் பாதிப்பு | ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். “மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிச.5-ம் …
Read More »ஆன்லைன் ரம்மி | “தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறதா இல்லையா?” – ராமதாஸ் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதா… இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது குறித்து தமிழக அரசு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர் …
Read More »தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 12.30 -14.30 மணி அளவில் கடந்தது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் …
Read More »அந்த மாதிரியெல்லாம் இல்லை! சேவை செய்பவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது! அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆவேசம்!
சென்னை: சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டு சேவை செய்பவர்களை தயவு செய்து கொச்சைப்படுத்தக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆவேசம் காட்டியுள்ளார். மிக் ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மூன்று நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதல் அவர்கள் மீனவர்கள் உதவியுடன் படகுகளில் …
Read More »