Breaking News
Home / செய்திகள் (page 77)

செய்திகள்

“திமுகவின் நிலம் ஆக்கிரமிப்பு இனியும் செல்லுபடியாகாது” – அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழகத்தின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், தனது தந்தையின் சிலையை அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தை தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமரர் டி.ஆர்.சுந்தரம் …

Read More »

மக்களவையில் அத்துமீறல் சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்: உரிய விசாரணை நடத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

சென்னை: மக்களவையில் நுழைந்து இருவர் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மக்களவைக்குள் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்கள்.இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின்பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மைசூரு …

Read More »

நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு அரசு சார்பில் 45 கிலோ சந்தனக்கட்டை: அரசாணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை, அறங்காவலர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவுக்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவுக்கு கட்டணமின்றி வழங்கி வருகிறது. அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், …

Read More »

முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் நிவாரண நிதியை ரொக்கமாக தராமல் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: நிவாரண தொகையை ரொக்கமாக வழங்கினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புண்டு எனவும், அதனை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிக்கரணை, வேளச்சேரி, வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் முழுமையாக …

Read More »

இந்துமத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவது பயங்கரவாத செயலா என்பது விவாதத்துக்குரியது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்துமதத் தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் கூறி ஈரோட்டைச் சேர்ந்த அசிப் முஸ்தகீன் என்பவர் கடந்தாண்டு ஜூலை மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அசிப் முஸ்தகீன் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் …

Read More »

சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் நிவாரண தொகை ரூ.6,000 கிடைக்குமா? – புதிய வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியீடு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருமானவரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு பணியாளர்கள் பாதிப்பைக் குறிப்பிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6,000 ரொக்கமாக …

Read More »

சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்டுமானப் பணிக்கு விரைவில் ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.432 கோடி செலவில் 27 மாடி கட்டிடம் கட்ட ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர் மெட்ரோ ரயில், புறநகர் மற்றும் நெடுந்தொலைவு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இடையே மக்கள் எளிதாகச் சென்றுவரும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஆண்டுமார்ச் மாதம் திறக்கப்பட்டது. இது, சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இங்கு லட்சக்கணக்கான …

Read More »

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் வெளியீடு

சென்னை: போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் காணொலியை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டார். மேலும் விழிப்புணர்வு மேற்கொள்ள மாணவர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் இல்லா மாநிலமாகத் தமிழகத்தை மாற்றவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முற்றிலும் ஒழிக்கவும் போலீஸார் (அமலாக்கப் பணியகம்) பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். …

Read More »

மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் புகைக் கருவியுடன் அத்துமீறியதால் பரபரப்பு – நடந்தது என்ன?

புதுடெல்லி: மக்களவையில் இன்று (டிச.13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறிய அந்த நபர்களைப் பிடிக்க எம்.பி.க்களும் உதவினர். அவர்கள் இருவரையும் அவைப் பாதுகாவலர்கள் மடக்கிப் …

Read More »

2 மாவட்டங்களில் நாளை யுஜிசி நெட் மறுதேர்வு!

சென்னை, நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் யுஜிசி நெட் மறுதேர்வு நாளை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவோருக்கான படிப்புகளுக்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்பட்டு …

Read More »