Breaking News
Home / செய்திகள் (page 74)

செய்திகள்

ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைப்பு: உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தல்

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பதவிக்கான 685 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், …

Read More »

ரூ.500 கோடி மதிப்பீட்டில் 552 தாழ்தள பேருந்துகளை தயாரிக்க டெண்டர்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: 552 தாழ்தள பேருந்துகளைத் தயாரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 பேருந்துகள், கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்துக்கு 100 பேருந்துகள், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பேருந்துகள் என மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. …

Read More »

தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: நெல்லை வந்தே பாரத் உள்பட பல ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுதொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையேயான போக்குவரத்து …

Read More »

ரூ.720 கோடி செலவில் காற்றாலை, சூரியசக்தியால் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி: தமிழக மின்வாரியம் திட்டம்

சென்னை: காற்றாலை, சூரியசக்தி மூலம் ரூ.720 கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை கூடுதலாக எடுத்துச் செல்வதற்காக பசுமைவழித் தடத்தின் (கிரீன் காரிடார்) 2-ம் கட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டம் சமூக ரங்கபுரத்தில் 400 கிலோ வோல்ட் திறன், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், திருப்பூர் மாவட்டம் பூலவாடியில் தலா 230 கிலோ வோல்ட்திறனில் …

Read More »

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சாலை மறியல்: மீனவ குடும்பத்தினருக்கு ரூ.12,500, படகுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.12,500-ம், படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, எண்ணூர் கடல் முகத்துவார பகுதியில் எண்ணெய் கசிவு கலந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள 8 …

Read More »

நெல்லை, தூத்துக்குடி வறண்ட பகுதிகளுக்கு தாமிரபரணி உபரிநீர் திறந்து வெள்ளோட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டவறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தமார்ச் 2008-ல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அன்றையமுதல்வர் மு.கருணாநிதி அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கனஅடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது)அணைக்கட்டில் இருந்து …

Read More »

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மீது புகார் மனு…

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும். பாரதிய ஜனதா கட்சியின் அதிகார இணையதள சமூக பக்கத்தில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்புறை செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதை கண்டித்து அதன் …

Read More »

காசி தமிழ் சங்கமம் 2.0 | சென்னையிலிருந்து முதல் குழுவின் பயணத்தை தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை: இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் வரும் டிசம்பர் 17 முதல் 30 வரை காசியில் நடைபெறுகிறது. இதற்காக 216 பேர் அடங்கிய முதல் குழுவின் பயணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம், வரும் டிசம்பர் 17 முதல் 30 வரை காசியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கங்கை நதியின் பெயரில் அமைந்த முதல் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்கள் …

Read More »

3 மாநில தேர்தலில் பாஜக வென்றதால் பின்னடைவு இல்லை..வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‘I.N.D.I.A.’ கூட்டணி வெல்லும். :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை : வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டதாக ஒன்றிய அரசின் குழு பாராட்டி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தனியார் ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், “வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டதாக ஒன்றிய அரசின் குழு பாராட்டி உள்ளது. ஒன்றியக் குழுவின் பாராட்டே தமிழ்நாடு அரசு திறமையாக செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.தமிழ்நாடு அரசின் நிர்வாகம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உள்ளது .2 …

Read More »

தீயணைப்பு துறைக்கு ரூ.63 கோடியில் வாகனங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தீயணைப்புத் துறை பயன்பாட்டுக்காக ரூ.63.30 கோடி மதிப்பிலான அதிஉயர் அழுத்த நீர் தாங்கிவண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீயணைப்புத் துறையின் செயல்திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பலமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளைச் சமாளிக்க 54 மீட்டர் உயரம் வரை வான்நோக்கி உயரும் ஏணி …

Read More »