சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மெரினா காமராஜர் சாலையில் உள்ளஉழைப்பாளர் சிலை அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியைஏற்ற உள்ளார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், வல்லுநர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் …
Read More »அண்ணாசாலையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.621 கோடியில் 3.2 கிமீ தூர 4 வழித்தட உயர்மட்ட சாலை
சென்னை: அண்ணாசாலையில் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையில் 3.20 கிமீ தொலைவுக்கு ரூ.621 கோடி செலவில் 4 வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப்பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை, அண்ணா சாலை சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகக் காணப்படுகிறது. குறிப்பாக, …
Read More »முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக வழக்கு – ஆர்.நட்ராஜ் தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலகல்
சென்னை: தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏவான முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் தொடர்ந்திருந்த வழக்கில் இருந்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விலகியுள்ளார். ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்த கோயில்களை இடித்தது தொடர்பாக தமிழக அரசுமற்றும் முதல்வரை விமர்சித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நட்ராஜ் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா …
Read More »7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு; இரு மடங்காக உயர்த்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
சென்னை: ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பு ரூ. 8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு …
Read More »தமிழ்நாட்டில் மின்வெட்டை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: 2030 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டங்கள், 15,000 மெகாவாட் நீரேற்று மின்திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் மின்வெட்டை நிரந்தரமாக தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் அதிக அளவாக 4000 மெகாவாட் …
Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் : சட்டப்பேரவை கூட்டம் குறித்து முக்கிய விவாதம்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் கவர்னர் உரை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், கவர்னர் உரையுடன் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் …
Read More »இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்
சென்னை: கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் பிறமாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். இந்தச் சூழலில், கடந்த ஆண்டு ஜனவரியில், கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், விசாரணைக்கு வாய்ப்பு கொடுக்காத, பெண்களுக்கு சம உரிமையும் …
Read More »2024 மக்களவை தேர்தல் | ஆயத்தமாகும் திமுக: 3 குழுக்களை அமைத்தது – உதயநிதி, மேயர் பிரியாவுக்கு வாய்ப்பு
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் திமுக அறிக்கை தயாரிப்பு குழு, மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழு என 3 குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது. இதில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் உதயநிதி ஸ்டாலினும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக அறிக்கையின் விவரம் வருமாறு: மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழு மக்களவை எம்.பி. கனிமொழி தலைமையில் …
Read More »பிரதமர் மோடி வருகையால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – கேலோ இந்தியா போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இன்று மாலை கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. …
Read More »ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் – பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பியோர் கடந்த 12-ம் தேதி இரவு முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பயணிக்கத் தொடங்கினர். இவர்களுக்காக 12,13,14 ஆகிய நாட்களில் …
Read More »