Breaking News
Home / செய்திகள் (page 78)

செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சொல்வது வாடிக்கையான ஒன்று. அப்போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்வது வழக்கம். அந்தவகையில் பொங்கல் பண்டிக்கைக்கான முன்பதிவு …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன? – சிபிஐ விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா, இல்லை கைவிடப்பட்டதா என்பது குறித்து சிபிஐ விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர்ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த …

Read More »

அமைச்சர்களுக்கு எதிரான மறுஆய்வு வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? – தலைமைப் பதிவாளர் பதில்தர உத்தரவு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை விடுவித்தும், விடுதலை செய்தும் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தது. இதில் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் …

Read More »

அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிஉள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுஎக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், 4-ம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொலி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய வைப்பது, …

Read More »

ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் நிவாரணம் விநியோகிக்க அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி

சென்னை: புயல் பாதிப்புக்கான ரூ.6 ஆயிரம்நிவாரணத் தொகையை ரேஷன்கடைகள் மூலம் வழங்குவதுதொடர்பாக இன்றுமுதல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில்,நிவாரண விநியோகம் குறித்து,அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ‘மிக்ஜாம்’ புயலால் சென்னைஉள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கவும்,இந்த நிவாரணத்தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி …

Read More »

புயல், மழை பாதிப்பால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சென்னை போலீஸார் வழக்கமான பணிக்கு திரும்பினர்

சென்னை: புயல், மழை பாதிப்பு மீட்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டிருந்த சென்னை போலீஸார் வழக்கமான பணிக்கு திரும்பினர். மிக்ஜாம் புயல் மற்றும் அதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3-ம் தேதி இரவுமுதல் மறுநாள் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. இதனால், இந்த 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டது. 18,400 போலீஸார்: குறிப்பாக …

Read More »

மருத்துவர் இறப்புக்கு பணிச்சுமை காரணம் இல்லை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் விளக்கம்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மருதுபாண்டியன் இறப்புக்கு பணிச்சுமை காரணம் இல்லை என்று டீன் தேரணிராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்த ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மருதுபாண்டியன் (30). கடந்த 10-ம்தேதி பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. …

Read More »

மழையால் பாதித்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்க வேண்டும்: அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், டிச.4 முதல் 7-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோருக்கு டிச.18-ம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு பகுதி மின் நுகர்வோரே இதனால் பயன்பெற முடியும். எனவே, 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும் பயன்பெறும் …

Read More »

சென்னையில் டிச.18-ல் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் டிச.18-ம் தேதி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்களை கவுரவிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி வந்தார். அந்தவகையில் இந்த ஆண்டும் அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா நடத்தப்படுகிறது. சென்னை வானகரம் ஜீசஸ்கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் …

Read More »

நிவாரண நிதி ரூ.6000 போதுமானதா… எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும், தேவையும், நிபந்தனைகளும்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.மிக்ஜாம் புயல் இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் டிசம்பர் 9-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. …

Read More »