சென்னை: இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு அரிய தகவல்களை வழங்கி …
Read More »தமிழக கவர்னர், முதல்வர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்
“உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது தான் எனக்கு முக்கியம். அதனால் தான் முதல்வர் பதவியை மிகப்பெரிய பொறுப்புடன் பார்க்கிறேன்…. மக்கள் நலனுக்காக அயராது உழைக்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு தனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட ஆளுநர், விஸ்வ குருவின் தலைவிதியை அடைய தேசத்தின் ‘அமிர்த …
Read More »உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமைப்படி பதவி உயர்வு: வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்த ஆசிரியர் சங்கங்கள்
சென்னை: தொடக்கக் கல்வியில் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமையின்படி பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் வரவேற்பும், இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை எனும் நடைமுறையின்படி பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மறுபுறம் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வட்டார அளவிலேயே பின்பற்றப்பட்டது. இதனால் மூத்த ஆசிரியர்கள் …
Read More »தீயணைப்புத் துறை இணை இயக்குநருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவு
சென்னை: தமிழக அரசின் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என்.பிரியாவுக்கு, முதல் முறையாக மாநில அரசு அல்லாத குடிமைப்பணிகள் ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக தீயணைப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் என்.பிரியா ரவிச்சந்திரன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்தார். கடந்த 2003-ம் ஆண்டு குரூப் …
Read More »டிஆர்பி வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு எப்போது? – பணிகளில் மெத்தனம் காட்டுவதாக பட்டதாரிகள் அதிருப்தி
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மேலும், கடந்தாண்டு வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற 9 அறிவிப்புகளில் ஒன்றுக்கு மட்டுமே டிஆர்பி தேர்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் …
Read More »தேசிய திறந்தநிலை பள்ளி 10, 12-ம் வகுப்பு சான்றிதழ் அரசு பணிக்கு உகந்ததல்ல
சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜே.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை: தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ், அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு உகந்ததல்ல என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பரிந்துரை செய்தது. தீவிர பரிசீலனைக்கு பின்னர் அதை ஏற்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி …
Read More »ஐஜி-க்கு பதவி உயர்வா? – இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கடுமையான குற்றம் சுமத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு …
Read More »“சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்” – ராமதாஸ்
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீரையும், மழையையும் நம்பி சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …
Read More »தமிழக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: நிலுவை மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம்பெறவிருக்கிறது. அதன்படி, இதுதொடர்பாக ஆளுநரிடம் ஒப்புதல் பெறும்பொருட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. மாலை நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசவுள்ளார் …
Read More »புத்தாண்டு கொண்டாட்டம் | பாதுகாப்புக்கு 18 ஆயிரம் போலீஸார் – விதிமுறைகளை வெளியிட்டது சென்னை காவல்துறை
சென்னை: 2023க்கு விடைகொடுத்து 2024-ஐ வரவேற்கத் தயாராகிவிட்டனர் மக்கள். தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டும் என்பதால் பாதுகாப்புப் பணிகளில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ள சென்னை மாநகரக் காவல் ஆணையர், கொண்டாட்டத்துக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். காவல்துறை அறிக்கை பின்வருமாறு: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் …
Read More »