சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து எழுதியிருக்கும் கடிதத்தில், “மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக …
Read More »எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு `பாரத ரத்னா’ விருது – ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்குபாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையையும், …
Read More »வெடிகுண்டு மிரட்டல் – விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்
சென்னை: சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர், முகப்பேர், பாரிமுனை, ஓட்டேரி, கோபாலபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிகளில் திரண்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் …
Read More »இடைநிலை ஆசிரியர் பணிக்கு டிஆர்பி தேர்வு.. விண்ணப்பம் முதல் தேர்வு வரை முழு விபரம்
சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை தொடர்ந்து, தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரும் 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒருகட்டமாக, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் …
Read More »ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கோயம்பேட்டில் பயணிகளை இறக்கி, ஏற்ற அனுமதி: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு …
Read More »பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலையீடு கூடாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து
சென்னை: கல்லூரிகள், பள்ளிகள் உட்பட கல்வி நிலையங்களில் அரசியல், அதிகார வர்க்கத்தின் தலையீடு இருக்கக் கூடாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில உருது அகாடமி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழா, உருது மற்றும் தமிழ் மொழி அறிஞர்கள் கவுரவித்தல் மற்றும் கல்லூரி மாணவர்களை கவுரவித்தல் என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலைபல்கலை. வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் …
Read More »பள்ளிகளை சுற்றி போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்க மாணவர்களை கொண்டு போக்குவரத்து போலீஸார் புது திட்டம்
சென்னை: பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குப் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்கும் …
Read More »தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் கொத்தடிமை முறை இல்லாத மாநிலம் ஆக்குவோம்: அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி
சென்னை: ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புபணியில் சிறப்பாக சேவை ஆற்றியதற்காக, குழந்தைகள் மற்றும்பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு …
Read More »வெற்றி துரைசாமியை தேடும் பணி ..6வது நாளாக தீவிர தேடலில் மீட்பு பணியினர் ..!
சென்னை : சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது. கடந்த ஞாயிறு அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது படத்திற்காக லொகேஷன் பார்க்க …
Read More »பிப்.17ல் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்
ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளுடன் பாய்கிறது ராக்கெட். 2,275 கிலோ எடை உள்ள செயற்கைகோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 ஆய்வுக் கருவிகள் உள்ளன. புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தகவல்களை துல்லியமாக வழங்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »