சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் தொடர்பாக 3-வது நாளாக திமுக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24-ம் தேதி நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கடந்த 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் …
Read More »சென்னை அரசு மருத்துவமனையில் சாந்தனுக்கு தீவிர சிகிச்சை
சென்னை: கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம்ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த 24-ம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி …
Read More »தமிழ்நாட்டில் எஸ்.பிக்கள் உட்பட 11 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: திருவள்ளூர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2. திருவள்ளூர் எஸ்.பி …
Read More »முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில் 5.7% அதிக சரக்குகளை கையாண்டு சாதனை: துறைமுக ஆணைய தலைவர் பெருமிதம்
சென்னை: சென்னைத் துறைமுகம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதற்கு முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமான சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. சென்னைத் துறைமுக ஆணையம் சார்பில், தண்டையார்பேட்டை பாபு ஜகஜீவன்ராம் மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. இதில், துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது: பல்வேறு போட்டிகளுக்கு இடையே சென்னைத் துறைமுகம் கடந்த டிசம்பர் மாதம் …
Read More »டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: தமிழக அரசு
சென்னை: டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்கள் மற்றும் மாநிலக் கல்லூரியில் 300 இடங்களுக்குப் பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பம் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும் என்று தமிழக அரசு …
Read More »மேகேதாட்டு அணை பணிகளை தீவிரப்படுத்தும் கர்நாடகா: மத்திய அரசு எச்சரிக்க ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே கர்நாடகத்தை மத்திய அரசு இதை எச்சரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. …
Read More »பொது விநியோகத் திட்ட பொருட்கள் மக்களை உரிய எடையில் சென்று சேர்வதை உறுதி செய்க: ஓபிஎஸ்
சென்னை: பொது விநியோகத் திட்டத்தின்மூலம் தமிழக மக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை வழங்குவதிலும், நுகர்வோருக்குத் தேவையான பொருட்கள் சரியான அளவில், நியாயமான விலையில், தரமானதாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும், நுகர்வோரின் குறைகளைக் களைவதிலும் மாநில அரசின் பங்கு மிக முக்கியமானதாகும். அதோடு, நியாய விலைக் கடைகளுக்கு உரிய எடையுடன் பொருட்களை அனுப்பாத திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். …
Read More »ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: அமைச்சர்கள், அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு
சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்துநடந்தது. முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் விசிக …
Read More »ஒரு ரீசார்ஜ்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. 365 நாள் வேலிடிட்டி.. ஏர்டெல்லின் ஏராளமான சலுகைகள்..
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த 2024-ம் ஆண்டில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு ஆண்டு வேலிடிட்டி தரும் மூன்று ப்ரீபெய்ட் …
Read More »தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்: ப.சிதம்பரம்
சென்னை: தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம். சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலை. கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணியிடம் தற்போதுவரை காலியாக உள்ளது. அவற்றுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளை ஆளுநரின் பார்வைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் …
Read More »