Breaking News
Home / செய்திகள் (page 108)

செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு …

Read More »

சென்னை, பெங்களூரு வணிக நிறுவன உரிமையாளர்கள் வீட்டில் ரெய்டு

சென்னை: சென்னை, பெங்களூருவில் உள்ள ஜவுளி கடை உரிமையாளர்கள் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. பெங்களூருவில் இருந்து வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கொச்சி மற்றும் பெங்களூருவை சேர்ந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்பாக இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. இதுபோல் சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் தொழிலதிபர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை …

Read More »

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்படும்.. அப்பாவு திட்டவட்டம்

சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகம் பெயர் மாற்றம், சனாதனம், திராவிடம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்புக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட மசோதாக்கள் …

Read More »

ரூ.57 குறைந்து வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,942 ஆக நிர்ணயம்: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை

சென்னை: நாடு முழுவதும் நடப்பு மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை இம்மாதம் 2 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. …

Read More »

அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் | நவ.21, 22-ல் எஸ்ஆர்எம்யூ ரகசிய வாக்கெடுப்பு: பொதுச்செயலாளர் கண்ணையா அறிவிப்பு

சென்னை: அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்துவது தொடர்பாக நவ.21, 22 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என தென்னக ரயில்வேமஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார். தென்னக ரயில்வே மஸ்தூர்யூனியன் சார்பில், பொது மகாசபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளராக என்.கண்ணையாமீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர்ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்துக்கு பிறகு,எஸ்ஆர்எம்யூ …

Read More »

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி

சென்னை புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 14ம் தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் …

Read More »

பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் 2,582 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி போட்டித் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வரும் 30-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயர்த்தி டிஆர்பி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் …

Read More »

4ஜி சேவை தொடங்கப்படாத நிலையில் சிம் கார்டுகளை தரம் உயர்த்த போவதாக பிஎஸ்என்எல் அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம்

சென்னை: சென்னையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் சிம் கார்டை 4ஜி சிம் கார்டாக தரம் உயர்த்தி தருவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணையதள வசதியை வழங்குவதற்காக தற்போது 5ஜி இணைய சேவை வசதியை வழங்கி வருகின்றன. அடுத்தக் கட்டமாக, இன்னும் அதிவேக 6ஜி சேவையை …

Read More »

நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை அரசுக்கே திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி – அடுத்தது என்ன?

சென்னை: பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக …

Read More »

நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பிடுக: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது”, என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் …

Read More »