மீண்டும் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனாவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆட்கொல்லி நோயான கொரோனா மீண்டும் மெதுவாக பரவி வருகிறது. சீனா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பரவி வரும் உருமாறிய புதிய வகை ஜேஎன் 1 கொரோனாவும் பரவியுள்ளது. இதுவரை இந்தியாவில் 21 பேருக்கு இந்த …
Read More »ஜனவரி 3 முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி…!
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 47வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ம் …
Read More »விருதுகளுக்கு தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அன்புமணி வாழ்த்து
சென்னை: விருதுகளுக்கு தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக அர்ஜுனா விருதுக்காக தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபடி வீரர் பவன்குமார் உள்ளிட்ட 26 பேருக்கும், தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள இறகுபந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி …
Read More »வடசென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனல்மின் நிலையம் ஜனவரி முதல் செயல்படும்: மின்வாரிய உயர் அதிகாரிகள் தகவல்
சென்னை: வடசென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல்செயல்படத் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரி மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும், கோடைக் காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயர்ந்தும் காணப்படும். மின் தேவையைப் பூர்த்திசெய்ய மின்வாரியம் தனது சொந்த உற்பத்தியைத் …
Read More »திட்டமிட்டபடி 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.. மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை : பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் உடைமைகளை இழந்து தவித்தனர். அதே போல் கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்கள் அதி கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மாணவர்கள் …
Read More »சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: 4-வது சுற்றில் குகேஷுக்கு வெற்றி
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 44-வது நகர்த்தலின் போது வெற்றிபெற்றார். இதன் மூலம் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இந்த தொடரில் குகேஷுக்குஇது முதல் …
Read More »தென் மாவட்டங்களில் கனமழை: தி.மு.க இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சேலத்தில் வரும் டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க இளைஞரணி 2-வது மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க இளைஞரணி …
Read More »ரூ.500 கோடி மதிப்பீட்டில் 552 தாழ்தள பேருந்துகளை தயாரிக்க டெண்டர்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை: 552 தாழ்தள பேருந்துகளைத் தயாரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 பேருந்துகள், கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்துக்கு 100 பேருந்துகள், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பேருந்துகள் என மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. …
Read More »தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: நெல்லை வந்தே பாரத் உள்பட பல ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுதொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையேயான போக்குவரத்து …
Read More »ரூ.720 கோடி செலவில் காற்றாலை, சூரியசக்தியால் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி: தமிழக மின்வாரியம் திட்டம்
சென்னை: காற்றாலை, சூரியசக்தி மூலம் ரூ.720 கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை கூடுதலாக எடுத்துச் செல்வதற்காக பசுமைவழித் தடத்தின் (கிரீன் காரிடார்) 2-ம் கட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டம் சமூக ரங்கபுரத்தில் 400 கிலோ வோல்ட் திறன், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், திருப்பூர் மாவட்டம் பூலவாடியில் தலா 230 கிலோ வோல்ட்திறனில் …
Read More »