சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை- தாம்பரத்துக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21,22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.59மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்துசெய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னைகடற்கரைக்கு நவ.8, 9, 10, 13, 14, …
Read More »நவம்பர் புரட்சி தின விழாவையொட்டி மூத்த கம்யூ. தலைவர் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி (நவ.7) எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் மற்றும் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு விழா சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழா வுக்கு தலைமை வகித்தார். நிகழ்வில் அலுவலகத்தின் முகப்பில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியின் மார்பளவு சிலையை சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் திறந்து வைத்தார். …
Read More »அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கையை முன்வைத்து பிப்ரவரியில் டெல்லியில் இயக்கம்: மாநில அரசு ஓய்வூதியர்கள் சம்மேளன மாநாட்டில் முடிவு
சென்னை: அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்தின் முதலாவதுஅகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை அகில இந்திய மாநிலஅரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு ஓய்வூதியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தூல் தலைமை வகித்தார். அ.சவுந்தரராஜன் வர வேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘நாட்டில் நிலவி வரும் பொருளாதார, சமூக, அரசியல் சூழல் குறித்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அரசமைப்புச் …
Read More »அமைச்சர் சேகர்பாபு இந்து என்பதில் பெருமை கொள்கிறார்; ஆனால் சனாதனவாதியல்ல: மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி வாதம்
சென்னை: ‘அமைச்சர் சேகர்பாபு இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறார்; ஆனால் அவர் சனாதனவாதியல்ல’ என அவர் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் என்.ஜோதி வாதிட்டார். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் தரப்பில் கோ-வாரண்டோ மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை நீதிபதிஅனிதா சுமந்த் முன்பாக நேற்று நடந்தது. அமைச்சர் …
Read More »அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள …
Read More »இந்திய அணிக்கு காத்திருக்கும் செமி ஆபத்து.. இதை மட்டும் கடந்து விட்டால் போதும்.. கப்பு நமக்குத்தான்!
சென்னை: செமி பைனல் ஆட்டங்களில் இந்திய அணிக்கு முக்கியமான சில சவால்கள் உள்ளன. இந்திய அணிக்கு கடுமையான சில சிக்கல்கள், சவால்கள் உள்ளன. இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் வீழ்த்தவே முடியாத அணியாக இந்திய அணி உருவெடுத்து உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் ஆடி உள்ள இந்திய அணி 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. 11 க்கு 11 போட்டிகளில் வெல்லும் …
Read More »சென்னை | விமானத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, அந்த விமானம் உள்நாட்டு விமானமாக கேரள மாநிலம் கொச்சி செல்ல இருந்தது, அதனால், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பார்சல் இருந்ததை பார்த்த ஊழியர்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் …
Read More »குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை: “குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள், 80 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்” என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 மற்றும் 2அ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் …
Read More »தீபாவளிப் பண்டிகை | பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க 19 அறிவுரைகளை வெளியிட்டது சென்னை காவல்துறை
சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கனம் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. Expand அதன்பேரில், வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் …
Read More »தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இன்று (நவ.7) முதல் …
Read More »