Breaking News
Home / செய்திகள் (page 120)

செய்திகள்

பொறியாளர்கள் குறைந்த செலவில் மருத்துவ உபகரணங்களை உருவாக்க வேண்டும்: துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தல்

சென்னை: மருத்துவப் பொறியாளர்கள் குறைந்த செலவிலான மருத்துவ உபகரணங்களை உருவாக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை சார்பில், மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் மையத்தின் 25-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தலைமை வகித்தார். பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன பாதுகாப்பு பயோ-பொறியியல் பிரிவு இயக்குநர் டி.எம்.கோட்ரேஷ், …

Read More »

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று (நவ.08) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ.09) அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை …

Read More »

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காரில் அதிமுக கொடியின்றி பயணித்தார் ஓபிஎஸ்: ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் நேற்று பயணம் செய்தார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவர் …

Read More »

அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுஆய்வு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2006-11-ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் மதிப்பில் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2012-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தங்கம் தென்னரசு மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த வில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் …

Read More »

தமிழகத்தில் சாலை வாகனங்களுக்கான வரி உயர்வு அமலுக்கு வந்தாச்சு.. உச்சாணிக்கு உயர்ந்த பைக், கார் விலை

சென்னை: தமிழகத்தில் சாலை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.. அதுபோலவே, சரக்கு வாகனங்களுக்கு சுமைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்கும் வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.. இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சொல்வதென்ன? வாகன விற்பனையாளர்கள் சொல்வதென்ன? தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. வந்தது அரசாணை: அதில், “வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி …

Read More »

அதிரடி காட்டும் எடப்பாடி.. அதிமுக ஐடி விங் 12 மண்டலங்களாக பிரிப்பு.. திலீப் கண்ணனுக்கு பொறுப்பு!

சென்னை: அதிமுக ஐடி விங் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக நிர்வாகிகளை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நான்கு மண்டலங்களாக பிரிந்திருந்த நிலையில், அவற்றை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அண்மையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதிமுக ஐடி விங் தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். …

Read More »

முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

சென்னை: அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது …

Read More »

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை பொறுத்தே தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்படும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தபடுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவனையை பொறுத்து தேர்தல் அட்டவனை இருதி செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்ககூடிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தின் 3-வது வாரத்தில் முடிவடையும். அந்த வகையில் தேர்வு பணிகள் முடிவடைந்தவுடன் தமிழகத்தில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு உண்டான அறிவிப்பும், தேர்தலுகான …

Read More »

கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி பெண் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சிவகாமி. இவர் சென்னை மாநகராட்சி 180 வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்ப பணியாளராக வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை சிவகாமி திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சம்பவ இடத்தில் நின்று …

Read More »

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், …

Read More »