சென்னை: திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என்றும், ஒருசிலர் விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். இந்தக் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆலயத்தில் இலவச தரிசனம், ரூ.20, ரூ.100 என தரிசன கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கந்த …
Read More »சொகுசு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தலாம்: போக்குவரத்து ஆணையர் உத்தரவு
சென்னை: சொகுசு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதித்தும், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு ஆயுள் வரி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும்போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் ஆயுள் வரியை 15, 20 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒருமுறை செலுத்தினால் போதுமானது. அதுவே வணிகரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு காலாண்டு அல்லதுஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், அண்மையில் மோட்டார் வாகன வரிகளை …
Read More »இறுதிப் போட்டிக்காக பிரம்மாண்டமாக தயாராகும் நரேந்திர மோடி மைதானம்: விமான சாகசங்கள், இசை நிகழ்ச்சி, லேசர் ஷோ
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் …
Read More »இபிஎஸ் Vs அமைச்சர்கள் | ஆளுநரால் மசோதாக்கள் நிராகரிப்பா, நிறுத்திவைப்பா? – பேரவையில் காரசார விவாதம்
சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் பொருட்டு தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) கூடியதையடுத்து பேரவையில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”ஆளுநர் இந்த 10 சட்ட மசோதாக்களையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார். இதற்கு அமைச்சர்கள் எதிர்வினையாற்றினர். சட்டப்பேரவையில் எடப்பாடி …
Read More »சென்னை – ஓட்டேரி பிரிக்ளின் சாலை ‘ஃபிரீ & கிளீன்’ சாலையாகுமா?
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ஓட்டேரி ஸ்ட்ராஹன்ஸ் (பட்டாளம்) சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் ஓட்டேரி பிரிக்ளின் சாலை வாகன நெரிசலில் மூழ்கியுள்ளது. செங்குன்றம், ரெட்டேரி, திருவிக நகர், மாதவரம், மூலக்கடை என பெரம்பூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் வள்ளலார் நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் முக்கிய சந்திப்பாக …
Read More »“சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக்கக் கூடாது” – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேச்சு
சென்னை: “சட்டப்பேரவை மிகப்பெரிய மாண்பும், மதிப்பும் கொண்டது. அதை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பின்னர் முதல்வர் கொண்டுவந்த அரசின் தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அப்போது பாஜக …
Read More »“ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது மதவாத, மானுட விரோத அரசியல்” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள்” என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “உத்தமர் …
Read More »“ஆளுநர் பதவியே அகற்றப்பட வேண்டியதாக இருந்தாலும்…” – பேரவையில் முதல்வர் ஸ்டாலினின் முழு உரை
சென்னை: “தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திமுக அரசு. இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது …
Read More »அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை இன்று (நவ.18) காலை சந்தித்தார். அப்போது அவர், “உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. …
Read More »உள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க கதி சக்தி திட்டம்: இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு
சென்னை: தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு-2023 சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மத்திய மீன்வளம், கால்நடை, பால் வளம் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: நாட்டின் முன்னேற்றத்தை துரிதப்படுத்த உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை ஒருங்கிணைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கதி சக்தி திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக இதுவரை இல்லாத அளவில் ரூ.100 லட்சம் கோடியை பிரதமர் …
Read More »