Breaking News
Home / செய்திகள் (page 101)

செய்திகள்

மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்! செந்தில் பாலாஜிக்கு 3 துறை மருத்துவர்கள் இன்று சிகிச்சை!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிசோதனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அவர் திடீரென கடந்த 15 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் தேதி புழல் சிறையில் அமைச்சர் …

Read More »

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த அநீதிக்கு எதிராக முதலடி எடுத்து வைத்த நாள், நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும்பயணத்தின் முதலடி எடுத்து வைத்த நாள் இன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள், நீதிக்கட்சி தொடங்கிய நாள் என்றும் தெரிவித்தார். கொள்கை களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம் எனவும் கூறினார்.

Read More »

வி.பி.சிங் நினைவு நாளில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையிடுங்கள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வி.பி.சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிஹாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார். அதைப் போல சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும், இல்லையேல் மன்னிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற …

Read More »

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.7 முதல் அரையாண்டு தேர்வு

சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோன்று, 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் …

Read More »

ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா: 4 புதிய திட்டங்களை அமைச்சர் மஸ்தான் தொடங்கிவைத்தார்

சென்னை: ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழாவில், 4 புதிய திட்டங்களை தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், வங்கியின் முதன்மை பொது மேலாளர் என்.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் …

Read More »

பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து தெருமுனை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்

சென்னை: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் இலக்கிய அணி தெருமுனை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி பங்கேற்று, இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் …

Read More »

கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சென்னை: கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 31 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவச திருமணங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் 31 ஜோடிகளுக்கான இலவச திருமணம் சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில்உள்ள கீதா பவன் திருமண மண்டபத்தில் நேற்று …

Read More »

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை – கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

சென்னை: சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.26, டிச.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயத்தை அடையும். கோட்டயத்தில் இருந்து நவ.27, டிச.4, 11, 18, …

Read More »

ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு நிதித்துறை ஒப்புதல் இல்லை: போக்குவரத்து துறைச் செயலர் தகவல்

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை என ஓய்வூதியர்களிடம் போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து பேசினர். அப்போது, கடந்த அக். 6-ம் தேதி சந்திப்பின்போது தீபாவளிக்குள் அகவிலைப்படி உயர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துத் துறை செயலர் உறுதியளித்ததை சங்க …

Read More »

ஆற்று மணல் அள்ளிய விவகாரம்: 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: ஆற்று மணல் அள்ளிய விவகாரத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரிகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு …

Read More »