சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், வருமானவரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் இல்லை என்றும்,இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அரசுஅறிவித்துள்ளது. …
Read More »கூவம் கரையில் 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சிஎம்டிஏ ஒப்புதல் அளிக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: கூவம் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சிஎம்டிஏ) பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை பூந்தமல்லி கூவம் ஆற்றிலிருந்து பங்காரு கால்வாய் பிரிந்து செல்லும் இடத்துக்கு அருகே கூவம் ஆற்றின் கரையில் 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பை நகர்ப்புறம் அல்லாத பயன்பாட்டுக்கான பகுதி என்ற …
Read More »சென்னை மெட்ரோ ரயிலில் நாளை ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் கடந்த 3-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அன்று முழுவதும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (பேடிஎம், வாட்ஸ்அப், போன்பே) முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் ரூ.5 என்ற சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக அன்று இச்சலுகையை பலரால் பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில், இந்த கட்டண சலுகை வரும் 17-ம் தேதி (நாளை) மீண்டும் …
Read More »சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது
சென்னை: வழக்கறிஞர்களின் விசில் சத்தம் மற்றும் பலத்த கைதட்டலுடன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரவாரமாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (எம்எச்ஏஏ) தேர்தல் நேற்று நடந்தேறியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நூற்றாண்டு கண்ட பழமையான வழக்கறிஞர்கள் சங்கமான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு (எம்எச்ஏஏ) 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு இந்த சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு வழக்குகள் காரணமாக …
Read More »மாவட்ட செயலாளர்களுடன் 18-ல் ஓபிஎஸ் ஆலோசனை
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இதில் கோவை மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போது கட்சி பெயர், கொடியை பயன்படுத்தக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் மேல்முறையீடும் …
Read More »இலக்கியம், கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலக தமிழர்களுக்கு விருது: ஜனவரியில் முதல்வர் வழங்குகிறார்
சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவில், இலக்கியம், கல்வி உள்ளிட்ட8 பிரிவுகளில் சிறப்பான செயல் பாடுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அயலக தமிழர் தினம்: ஆண்டுதோறும் ஜன.12-ம் தேதிஅயலக தமிழர் தினமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில், 2022 மற்றும் 2023-ம்ஆண்டுகளில் அயலகத் தமிழர்தினம் சிறப்பாகக் கொண்டாடப் …
Read More »இசையை வளர்ப்பதில் மியூசிக் அகாடமி முன்னுதாரணமான கலை மையம்: தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பாராட்டு
சென்னை: மியூசிக் அகாடமியின் 97-வதுஇசை விழாவை, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து சங்கீத கலாநிதி விருதாளருக்கு `இந்து குழுமம்’ வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை(ரூ.1 லட்சம், பொன்னாடை, நினைவுப் பரிசு), இந்தாண்டு சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கர்னாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீக்கு அளித்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, ‘‘புரந்தரதாசர், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா …
Read More »எண்ணூர் எண்ணெய் கழிவுகளை சிபிசிஎல் டிச.17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை டிசம்பர் 17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சிபிசிஎல் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.18-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது, அதுதொடர்பான அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி …
Read More »சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் | லெவோன் அரோனியனுடன் குகேஷ் இன்று மோதல்
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று (15-ம் தேதி) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், பி.ஹரிகிருஷ்ணா, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஹங்கேரியின் சனான் சுகிரோவ், உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோர் கலந்து …
Read More »ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய நிலையில், விற்பனை விலையை உயர்த்தக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். கால்நடைக்கான இடுபொருள் விலை, உற்பத்தி செலவினம் அதிகரித்ததால் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க …
Read More »