Breaking News
Home / செய்திகள் (page 70)

செய்திகள்

36-வது நினைவு தினம் எம்ஜிஆர் நினைவிடத்தில் பழனிசாமி நாளை அஞ்சலி

சென்னை: அதிமுக சார்பில் நாளை எம்ஜிஆரின் 36-வது நினைவு தினம் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 36-வதுநினைவு நாள் நிகழ்ச்சி சென்னை மெரினாகடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில்நாளை (டிச.24) காலை 10 மணிக்கு நடைபெறஉள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று அஞ்சலி …

Read More »

ஒரே ஒரு கேள்வி.. சட்டுனு டென்ஷனான நிர்மலா சீதாராமன்.. “அந்த ரூ.4000 கோடி என்னாச்சு!” பயங்கர கோபம்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடுமையாகச் சாடினார். இம்மாத தொடக்கத்தில் வட தமிழ்நாட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் மிகக் கடுமையாகப் பாதித்தது. அனைத்து பகுதிகளிலும் நமழை நீர் தேங்கிய நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவே சில நாட்கள் வரை ஆனது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு …

Read More »

தொழிற்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்கனுமா? இதை செய்யுங்க.. ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ்

சென்னை: கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனை வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், இரண்டாம் முறையாக …

Read More »

உருமாறிய ஜேஎன் 1 கொரோனா.. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் மக்கள் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் : விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

மீண்டும் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனாவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆட்கொல்லி நோயான கொரோனா மீண்டும் மெதுவாக பரவி வருகிறது. சீனா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பரவி வரும் உருமாறிய புதிய வகை ஜேஎன் 1 கொரோனாவும் பரவியுள்ளது. இதுவரை இந்தியாவில் 21 பேருக்கு இந்த …

Read More »

தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு.. வங்கி கணக்கு இருக்குல்ல.. “ஊதிய நாளன்று” இதை பண்ணுங்க.. அதிரடி

சென்னை: வெள்ள நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக, அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 4 மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை, தமிழக அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், வருமான வரி …

Read More »

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜன.24-ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறவலியுறுத்தி ஜன.24-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தேசிய அளவிலான கட்சி சார்பற்ற எஸ்.கே.எம். அமைப்பு கூட்டம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு …

Read More »

அர்ஜுனா விருது, சாகித்ய அகாடமி விருதுகளை பெற்ற தமிழக வீரர்கள், எழுத்தாளருக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் அர்ஜுனா விருதை பெற்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் அரசியல்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: நடப்பாண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி, அர்ஜுனா விருதை …

Read More »

பொன்முடி சரணடையாவிட்டால் கைது செய்ய உத்தரவு.. கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? நீதிபதி சொன்னதென்ன?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி ஜனவரி 22ஆம் தேதிக்குள் சரணடையாவிட்டால் இருவரையும் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆட்சி மாறிய உடன் காட்சிகள் மாறின …

Read More »

வணிக சிலிண்டரின் விலை குறைந்தது.. எதிர்பாராத நல்ல செய்தி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையுமா?

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எல்பிஜி விலை, கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலையை மட்டுமே பெரிதாக சார்ந்துள்ளது. இவை அதிகமாகும் போது, ​​சென்னையில் எல்பிஜி சிலிண்டர் விலையும் அதிகரிக்கும். குறையும்போது சென்னையில் எல்பிஜி சிலிண்டர் விலையும் குறையும். கடந்த செப்டம்பரில், 19 கிலோ …

Read More »

ஜனவரி 3 முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி…!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 47வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ம் …

Read More »