சென்னை: காய்ச்சல், சளி உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கோவா, மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் …
Read More »வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம்
சென்னை: அதிகனமழையாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் – தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – …
Read More »போக்குவரத்து சங்கங்களுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய கம்யூ. வலியுறுத்தல்
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி, தக்க தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பிற மாநிலங்களை விடசிறப்பான போக்குவரத்து சேவையை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழங்கி வருகின்றன. இவை 23,000 பேருந்துகளையும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்ட பெரிய கட்டமைப்பாகும். கடந்த …
Read More »“69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” – முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1881ம் ஆண்டில் தொடங்கி 1931ம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக …
Read More »தென்மாவட்ட வெள்ள பாதிப்பு | டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க அன்புமணி கோரிக்கை
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு …
Read More »ஆதிதிராவிடர், பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தனி கவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், ரூ.32.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்கள், விடுதிகள், சமுதாயநலக் …
Read More »ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் காலிபணியிடங்களுக்கு முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு
சென்னை: ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கு ஏற்ப,குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு என்னென்ன போட்டித் …
Read More »சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ நிலையங்கள் அருகே பேருந்து நிறுத்தம்
சென்னை: இரண்டாம் கட்ட பணியின்போது மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடத்துக்கு அருகிலேயே பேருந்து நிலையங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒருபகுதியான பூந்தமல்லி – போரூர் பாதையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலேயே பேருந்து நிறுத்தங்களும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் இருந்து மெட்ரோ ரயில்களுக்கு எளிதாக மாறுவதற்கு வசதியாக இருக்கும். சென்னையில் இரண்டாம் …
Read More »புத்தாண்டு: சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மெரினா கடற்கரை உட்புற சாலை வரும் 31-ந்தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ம் தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவத்துக்காக …
Read More »இறுதி இலக்கை எட்டும் வரை போராட்டப் பயணத்தை தொடர்வோம்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழாவில், நூற்றாண்டு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலினும், பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை கேரள முதல்வர் பினராயி விஜயனும் வெளியிட் டனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றியுள்ளதெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரள தலைவர்களின் அழைப்பின்பேரில் பெரியார் சென்று தலைமையேற்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு …
Read More »