Breaking News
Home / செய்திகள் (page 35)

செய்திகள்

ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: : தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தவதற்குரிய அனைத்துவசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தளபேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. …

Read More »

தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது ஸ்பெயினின் ‘ரோக்கா’ நிறுவனம்: 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்

சென்னை: ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அந்நாட்டின், ஆக்சியானா நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் காட்டியிருக்கிறது. அதேபோல், ரூ.400 கோடி ரூபாய் முதலீட்டில் ரோக்கா நிறுவனம் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்திருப்பதாக தகவல் …

Read More »

தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை! – போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு வீட்டில் தங்கம், வைரம், ரொக்கப் பணம் என பல கோடி மதிப்பில் கொள்ளை சம்பவத்தை அரங்கேறி இருப்பது குறித்து போலீசார் இரவு பகல் பாராமல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் பீச் பகுதியில்தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்களின் சொகுசு வீடு உள்ளது.இந்த சொகுசு குடியிருப்புகளின் பின்புறம் காலி இடம் உள்ள …

Read More »

கேலோ இந்தியா விளையாட்டு: 91 பதக்கங்கள் குவித்து தமிழகம் சாதனை

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி,மதுரை,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. மகளிருக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி.கீர்த்தனா 188 கிலோ (ஸ்னாட்ச் 85+கிளீன் & ஜெர்க் 103) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான கே.ஓவியா 184 கிலோ (ஸ்னாட்ச் 78+ கிளீன் …

Read More »

மநீம.வுக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை: தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்களவைத் தேர்தல் பணிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு வெளிநாடு சென்றதால் முன்னதாக சென்னையில் கட்சித் தலைமையகத்தில் துணைத் தலைவர்கள்மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருடன் நேற்றுஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மக்களவைத்தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவையும் அவர் அமைத்தார். இது தொடர்பாக கமல்ஹாசன் நேற்று விடுத்த அறிக்கை: மக்களவைத் தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு பெருவெற்றியை ஈட்டுவதற்காக …

Read More »

நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் மாயம்: நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை: தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் மாயமானது தொடர்பாக நடவடிக்கை கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பணப்பயன்கள் நிறுத்தப்படாது என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின்கீழ், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் 18 அமைப்புசாரா நலவாரியங்களில் 45 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்நிலையில், இந்த நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் …

Read More »

கீழ்வெண்மணி நினைவுச் சின்னம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கொஞ்சம்கூட அறியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். நினைவு சின்னத்தை கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும் ஆர்எஸ்எஸ்-ஐ பதவி சுகத்துக்காக ஆராதிக்கும் ரவிகளுக்கு, ஆதிக்கங்களுக்கு எதிராக சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான தியாகத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டகம்யூனிஸ்ட்களையும், அத்தோடுதுணை நிற்கும் உழைப்பாளி மக்களையும் புரிந்து கொள்வதற்கான மனமும், திறமும் கிடையாது. உண்மையில் ஆர்.என்.ரவி போன்ற …

Read More »

காங்கிரஸை விமர்சித்து பேசிய விவகாரம் | அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக தான் கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மாநில திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: அமைச்சர் ராஜகண்ணப்பனின் செயல்பாடுக்கான பதிலை …

Read More »

“ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது” – தினகரன் கண்டனம்!!

சென்னை: பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் , திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை …

Read More »

நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு, கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்: அன்புமணி ராமதாஸ் தகவல்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 – 25ம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் கோக்கா மணி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 110 சிறப்பு …

Read More »