சென்னை: தமிழகம் முழுவதும் 55 இடங்களில்நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, ஆர்எஸ்எஸ் இயக்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, …
Read More »தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள்தான் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: முத்தரசன்
சென்னை: இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் நாகபட்டினம் கோடியக்கரை பகுதியில் இருந்து தங்கு கடல் மீன் பிடிப்புக்காக கடந்த 15.11.2023 ஆம் தேதி …
Read More »விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் வாபஸ் ஒரு தற்காலிக சமாதான நடவடிக்கை: தமிழ் மாநில காங்கிரஸ் சாடல்
சென்னை: “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது ஒரு தற்காலிக சமாதான உடன்படிக்கைதான். இது விவசாயிகளையும் தமிழக மக்களையும் ஏமாற்றும் செயலாகும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய …
Read More »சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க `மக்கள் மளிகை’ கடைகளை திறக்க வேண்டும்: வணிகர்களுக்கு தமிழிசை வேண்டுகோள்
சென்னை: பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகங்களைபோல, சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க மக்கள் மளிகைக் கடைகளை திறக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேரமைப்பின் பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு அனைவரையும் வரவேற்றார். மாநில பொருளாளர் …
Read More »பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் கார் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
சென்னை: பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ரயில், விமானத்தில் செல்வதைவிட சாலை மார்க்கமாக காரில் பயணம்செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். திமுக இளைஞரணியில் இருந்தபோது, ஆரம்பகாலத்தில் தமிழகம் முழுவதும் காரில் பயணித்து, கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, அவரே காரை ஓட்டிச் செல்ல விரும்புவார். அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்த …
Read More »கரோனாகால பணிக்கு ஊக்க மதிப்பெண் கோரி வழக்கு: மருந்தாளுநர்கள் பணி நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டாபிராமைச் சேர்ந்த எம்.கமலகண்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் மருந்தாளுநர் படிப்பை கடந்த 2019-ம் ஆண்டு முடித்துவிட்டு தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் கேதாரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மருந்தாளுநராக பணியில் சேர்ந்தேன். தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் 889 மருந்தாளுநர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2022 ஆக.10-ம் தேதி வெளியிட்டது. அதன்பிறகு …
Read More »அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்த அறிக்கையை தினமும் சமர்ப்பிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை
சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை; தமிழகத்தில் அரசு, உதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமூகநலத்துறை ஆணையர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘சமீபத்தில் …
Read More »அரசியல் அங்கீகாரம் பெற தேர்தல்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்: நடிகர் எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்
சென்னை: அரசியல் அங்கீகாரம் இல்லாத எந்த சாதிக்கும் மரியாதை இருக்காது.எனவே, வரும் தேர்தல்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் வலியுறுத்தினார். ‘தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்’ என்ற தலைப்பிலானகருத்தரங்கம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகரும், பாஜக ஆதாரவளருமான எஸ்.வி.சேகர் பங்கேற்றுப் பேசியதாவது: தாய், தந்தை, சாதி, மதம் போன்றவற்றை நம்மால் தீர்மானிக்க முடியாது. இறைவன்தான் தீர்மானிப்பார். ஒருவர் தேவையின்றி மதம் மாற வேண்டியதில்லை. ஒவ்வொரும் …
Read More »ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: அமித் ஷாவை சந்திக்க திட்டம்
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட நிபுணர்களை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ரவி மீது குற்றம்சாட்டி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலையில் கடிதம் எழுதினார். ‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முக்கிய மசோதாக்களுக்கு …
Read More »தி.மலையில் தனியார் அறக்கட்டளை நிர்வாகம் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கல்வி நிறுவனம் கட்டியுள்ளதா? – ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை: திருவண்ணாமலை மாத்தூரில் தனியார் அறக்கட்டளை நிர்வாகம், நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கல்வி நிறுவனங்களை கட்டியுள்ளதா என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா நிர்வகித்து வரும் திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாகம், மாத்தூரில் உள்ள நீர்நிலை புறம்போக்கு மற்றும் …
Read More »