சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகள் குறித்த பட்டியலை டெல்லி பொறுப்பாளர்களிடம் நாளை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இண்டியா கூட்டணி சார்பில் தலைவர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு …
Read More »காலிப்பணியிடங்களை அயல்பணி மூலம் நிரப்ப தமிழக மின்வாரியம் திட்டம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
சென்னை: கடன் சுமை அதிகரித்து வருவதால், களப் பணியாளர்கள், மின் கணக்கீட்டாளர்கள் பணியிடங்களை அயல்பணி மூலம் நிரப்ப மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு மின்வாரியத்தில் தற்போது 58,145 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 9,300 பணியிடங்கள் களப் பணியாளர் மற்றும் மின்கணக்கீட்டாளர் பணியிடங்கள் ஆகும். மின்வாரியத்துக்கு தற்போது ரூ.1.5 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த கடன் தொகை …
Read More »அம்மோனியா வாயு கசிவு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு: அனுமதிக்கப்பட்ட அளவைவிட 51% அதிக மாசு கண்டுபிடிப்பு
சென்னை: எண்ணூரில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் 51 சதவீதம் அதிகமாக அம்மோனியா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. சென்னை, எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் தொழிற்சாலையில் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மூலப்பொருளான அம்மோனியா திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12 ஆயிரத்து 500 டன் கொள் திறன் கொண்ட சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் அம்மோனியா திரவம் …
Read More »போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜன.3-க்கு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பு
சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜன.3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் …
Read More »பபாசியின் கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு: புத்தக காட்சியில் முதல்வர் வழங்குகிறார்
சென்னை: பபாசியின் சார்பில் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த 6 படைப்பாளிகளுக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரிலான கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.1 லட்சம் ரொக்கம் பரிசு: அந்த விருதுடன் ரூ.1 லட்சம் பணமும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். அதன்படி 2024-ம்ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது’ பெறுவோர் பட்டியல் …
Read More »தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.விஜயகாந்த் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தே.மு.தி.க தலைமை …
Read More »“கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிக நிறுத்தம்; அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய குழு” – அமைச்சர் மெய்யநாதன்
சென்னை: அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். எதிர்காலத்தில் அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் பெய்யநாதன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பெய்யநாதன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் அவர், “எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆலையில் …
Read More »“தமிழ்நாட்டுக்கு 10 லட்சம் கோடி…” உதயநிதி Vs அண்ணாமலை சர்ச்சை… பி.டி.ஆர் சொல்லும் கணக்கு…
தமிழகம் தன் பங்குக்கு அதிக வரி வருமானத்தை மத்திய அரசுக்குத் தந்தாலும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியைப் போதுமான அளவில் தருவதில்லை என அமைச்சர் உதயநிதி சொல்லப் போக, கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 10 லட்சம் கோடிக்கு மேல் தந்திருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்ல, இந்தப் பிரச்னையானது பலரும் பேசும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இது பற்றி தமிழக முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் …
Read More »“831 பொறியியல் பட்டதாரிகளின் பணிகளுக்கான நியமன ஆணைகளை அரசு உடனே வழங்க வேண்டும்” – ராமதாஸ்
சென்னை: பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகிவிட்டன. தேர்வு நடைபெற்று 17 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால், வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க அரசு தாமதிப்பது ஏன்? எனத் தெரியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது …
Read More »“வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை நிறுத்தமா?” – அரசு விளக்கமளிக்க அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை. படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சிதைத்துவிடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் …
Read More »