Breaking News
Home / செய்திகள் (page 84)

செய்திகள்

மழைநீர் வடிகால் பணி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக அமைப்புரீதியான மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அவர், மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததோடு, மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைகளையும் …

Read More »

சென்னை பல்கலை. பருவ தேர்வுக்கான புதிய அட்டவணை

சென்னை: கனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்களில் கடந்த டிச. 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு,கலை அறிவியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், பருவத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகளின் விவரங்களை சென்னை …

Read More »

சூரியனை படம்பிடித்த ஆதித்யா விண்கலம்: ஆராய்ச்சிகளுக்கு உதவும் என இஸ்ரோ தகவல்

சென்னை: ஆதித்யா விண்கலத்தின் சூட் தொலைநோக்கி மூலம் வெவ்வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர்2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது பல்வேறுகட்ட பயணங்களை கடந்து சூரியனின் எல்-1 பகுதியைநோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. …

Read More »

“ரூ 2,191 கோடிக்கே இதுவரை மழைநீர் வடிகால் பணி நிறைவு” – ‘ரூ.4,000 கோடி’ விவகாரத்தில் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: “மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ 5,166 கோடி. ஆனால், இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதித் தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகள் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ரூ.4,000 கோடி குறித்து வெள்ளை …

Read More »

“பால், குடிநீர், உணவுக்காக உயிர் போராட்டம்” – தமிழக அரசு மீது அண்ணாமலை விமர்சனம் @ சென்னை வெள்ளம்

சென்னை: “உணவுப் பண்டங்களுக்காக உயிர்ப் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. ஆவின் பாலுக்கு ஆலாய்ப் பறக்க வேண்டி இருந்தது. ஒரு தண்ணீர் கேனுக்கு 75 முதல் 100 ரூபாய் விலையில் குடிநீர்களுக்காக குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருந்தது. இதற்கெல்லாம் தமிழக அரசு நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள்தான் காரணம்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரம் ஸ்தம்பித்துப் போனது. …

Read More »

புயல் நிவாரணத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்: பொதுமக்கள், நிறுவனங்கள் நிதி வழங்க வேண்டுகோள்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு, மீட்புக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்குஒரு மாத சம்பளத்தை முதல்வர்மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள நிலையில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொழில் நிறுவனங்கள் நிதிவழங்குவதற்கான வங்கி கணக்குஉள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தி்ல் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த இயற்கைப்பேரிடரால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read More »

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார் காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் 18,400 போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செம்பியம் காவலர் குடியிருப்புக்கு காவல் ஆணையர் நேற்று சென்று, காவலர்குடியிருப்பை ஆய்வு செய்தார். காவலர் குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பைவழங்கி குறைகளை கேட்டறிந்தார். அவற்றை உடனடியாக தீர்க்குமாறு உத்தரவிட்டார். பின்னர், பெரம்பூர், …

Read More »

விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கடலூர் முதன்மை நீதிபதிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் தந்தை 53 வயதை கடந்து விட்டதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் மறுக்கப்பட்டது. பணி நியமனம் வழங்க மறுத்த கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவை எதிர்த்து ஊழியரின் மகன் சதீஷ்குமார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விருப்ப ஓய்வு …

Read More »

 தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது …

Read More »

சென்னை மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்து தமிழக அரசு கோரிய ரூ.5060 கோடியை விரைவாக வழங்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: சென்னை மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக ஒன்றிய அரசு அறிவித்து தமிழக அரசு கோரிய ரூ.5060 கோடியை விரைவாக வழங்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய செயற்குழு உறுப்பினர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பங்ேகற்றார். துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரபீக் அஹமது, அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, …

Read More »