சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைசெயலகத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை விடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம்தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் இருந்தனர். …
Read More »வானியல் ஆய்வுக்கான எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்: பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜன.1-ல் ஏவப்படுகிறது
சென்னை: வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்விசி-58 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டுதினமான ஜனவரி 1-ம் தேதி காலை 9.10மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.தற்போது ராக்கெட், செயற்கைக்கோள் பாகங்கள் ஒருங்கிணைப்பு, சோதனை ஒட்டம் போன்ற செயல்பாடுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் …
Read More »மின்பகிர்மான மண்டலங்கள் மாற்றி அமைப்பு: புதிதாக திருவள்ளூர் வட்டம் உருவாக்கி மின்வாரியம் உத்தரவு
சென்னை: நிர்வாக வசதிக்காக மின்பகிர்மான மண்டலங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, புதிதாக திருவள்ளூர் வட்டத்தை உருவாக்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் சென்னை வடக்கு, காஞ்சிபுரம், கோவை உட்பட 12 மண்டலங்களாகவும், 44 மின்பகிர்மான வட்டங்களாகவும் செயல்பட்டு வருகிறது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெறும் பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய கோட்ட அலுவலகங்கள் சென்னை வடக்கு மண்டலத்தின்கீழ் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், மின்பகிர்மான மண்டலங்களை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். …
Read More »சென்னையில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
சென்னை: சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகைகூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் அனைவரும், டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த அதிகன மழை பாதிப்புகளிலிருந்து மாநகரை விரைவாக மீட்டதாகக் கூறி மாநகராட்சி …
Read More »தென்மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை மீட்ட போலீஸார்: டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்
சென்னை: தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. முன்னதாக காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 39,845 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களிலும், தற்காலிக முகாம்களிலும் …
Read More »சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன் தகவல்
சென்னை: இந்த ஆண்டு சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடிஅளவுக்கு ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ‘அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவது’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில்மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் பங்கேற்று மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார். …
Read More »சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்: ஆளுநர், அமைச்சர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி
சென்னை: சென்னை தீவுத்திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர், மத்திய, மாநில அமைச்சர்கள், தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் என லட்சக்கணக்கானோர் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்(71). உடல்நலக் குறைவால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு இயற்கை எய்தினார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமம் வீடு மற்றும் கோயம்பேடு கட்சி தலைமை …
Read More »தமாகா தலைவராகி இருப்பார் விஜயகாந்த்: நெருங்கிய நண்பர் எம்.ராஜாராமன் தகவல்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் ஆரம்பகால நண்பர் எம்.ஆர். என்கிற எம்.ராஜாராமன். மீனா தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ‘ஒரு புதிய கதை’, ‘கிழக்கு வீதி’, விஜய் நடித்த ‘வசந்த வாசல்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்திருக்கும் ராஜாராமன்தான், விஜயகாந்தை காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனாரிடம் அறிமுகப்படுத்தியவர். விஜயகாந்துடன் அவருக்குள்ள நட்பு குறித்து அவர் கூறியதாவது: நான் நாளிதழ் ஒன்றில்செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது விஜயகாந்திடம் செய்தியாளராகத்தான் பழகினேன். பிறகு எங்களுக்குள் ஆழமான …
Read More »சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1-க்கு ஐஎஸ்ஓ 9001 மற்றும் 14001 தரச் சான்று
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1-க்கு சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஐஎஸ்ஓ 9001 தர மேலாண்மை அமைப்பு மற்றும் ஐஎஸ்ஓ 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த சான்றிதழை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக்கிடம் பீரோ வெரிடாஸ் (Bureau Veritas) நிறுவனத்தின் சார்பாக அதன் மேலாளர் வின்ஸ்டன் ஐசக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் …
Read More »சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று திறப்பு: கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைக்கிறார்
சென்னை: சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவிவரும் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கிலும், கடந்த 2018-ம்ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்தகிளாம்பாக்கத்தில் 86 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400கோடியில் புதிய பேருந்து நிலையம்கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி …
Read More »