Breaking News
Home / செய்திகள் (page 49)

செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு வந்ததா? வந்து விழுந்த கேள்வி.. உதயநிதி பதில் இதுதான்

சென்னை: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு வந்ததா என்று செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டனர். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலை பார்க்கலாம். இந்துக்களின் புனித கடவுளான ராமர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அயோத்தியில் தற்போது புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகத்திற்குப் பக்தர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. வரும் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற …

Read More »

ஆளுநர் – பெரியார் பல்கலை. துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: முத்தரசன்

சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஆளுநர் நேரில் சந்தித்துள்ளது ஆளுநர் மீது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார்.துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் மீதான குற்றச்செயல்கள் தொடர்பாக காவல்துறை …

Read More »

“சாட்சிகளை கலைக்க வாய்ப்பு” – பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜாமீன் வழக்கு: ஜன.19-ல் விசாரணை

சென்னை: சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்று, வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி நிர்மல் குமார் அறிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விதிகளை மீறி அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப …

Read More »

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உடனடியாக அச்சிட்டு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனால் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உடனடியாக அச்சிட்டு வழங்க நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. குடும்ப அட்டை மிக மிக …

Read More »

எண்ணூரில் 2.20 லட்சம் லிட்டர் எண்ணெய் கழிவு அகற்றம்: பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

சென்னை: எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதுவரை 2.20 லட்சம் லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது, மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவிய எண்ணெய் படலம், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது. கடலில் …

Read More »

தமிழகத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன் கருத்துகேட்பு: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 2024-ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் அதற்குப் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மூலம் கருத்துரு அனுப்புமாறு அரசு …

Read More »

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஜனநாயகம், அரசியலமைப்பு பாதிப்பு: அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சென்னை: பாஜக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ஜனநாயகம், அரசியலமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் தொடங்க உள்ளார். இந்நிலையில், அது தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் அகில இந்திய செயலாளர் மது கவுட் யாக் ஷி, தமிழக பொறுப்பாளர் (தகவல் தொடர்பு) …

Read More »

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான …

Read More »

இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என ஸ்டாலினால் கூறமுடியுமா? – அண்ணாமலை கேள்வி

சென்னை: திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று மு.க.ஸ்டாலினால் கூறமுடியுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக கட்சி தொடங்கிய நாளன்று சென்னை ராபின்சன் பூங்காவில் 26 பேர் பேசினார்கள். அதில் கருணாநிதி பெயர் மட்டும்தான் நமக்குத் தெரியும். மீதமுள்ள 25 பேரின் பெயர்கள் யாருக்காவது தெரியுமா? குடும்ப அரசியலால் …

Read More »

சென்னையில் கூடுதல் வசதியுடன் பெண் காவலர் ஓய்வு இல்லம்: ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்துவைத்தார்

சென்னை: வெளி மாவட்ட பெண் காவலர்கள் தங்குவதற்காக, சென்னையில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக சென்னை வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலை, ஐசக் தெருவில் ‘பெண் காவலர்கள் ஓய்வு இல்லம்’ பயன்பாட்டில் இருந்தது. அதை சீரமைத்து, கூடுதல் வசதிகளுடன் கூடிய ஓய்வு இல்லத்தை சென்னை காவல் ஆணையர் …

Read More »