Breaking News
Home / செய்திகள் (page 51)

செய்திகள்

அயலக தமிழர் தின விழா சென்னையில் இன்று தொடக்கம்: விருதுகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் நாளை உரை

சென்னை: அயலகத் தமிழர் தின விழா சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நாளை விருதுகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் …

Read More »

தேனியில் டிடிவி தினகரன் போட்டி? லோக்சபா தேர்தலில் எதிர்க்க போகும் மன்சூர் அலிகான்! பரபர அறிவிப்பு

சென்னை: அமமுக கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் டிடிவி தினகரனை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதம் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் …

Read More »

சென்னையில் பரபரப்பு… எழும்பூரில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே இன்று ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் ஐதராபாத்தில் விபத்துக்குள்ளான நிலையில், இன்று சென்னையில் ரயில் எஞ்சின் தடம்புரிண்டது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரயில் எஞ்சினை மீட்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று காலை புதுச்சேரியில் இருந்து பயணிகளுடன் எழும்பூர் ரயில் நிலையம் ஒன்றாவது நடைமேடைக்கு வந்தடைந்தது விரைவு ரயில், நடைமேடையில் …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பின்னர் அதன் …

Read More »

முரசொலி நில விவகாரம்: புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். …

Read More »

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும்வரை சுங்கக் கட்டணத்தை ரத்து செய்க: ராமதாஸ்

சென்னை: மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் பணிகள் முடியும் வரை சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான பகுதி அண்மையில் பெய்த மழையில் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. சாலையின் மேற்பரப்பு முற்றிலுமாக சேதமடைந்து …

Read More »

தென் மாவட்டங்களில் உற்பத்தி திறன் குறைவு; முதலீட்டு இலக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை: தென்மாவட்டங்களில் உற்பத்தி திறன் குறைவாக உள்ளதாகவும், முதலீடுகளுக்கான இலக்கை மேலும் அதிகரிக்க உழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் 34 சதவீத உற்பத்தி திறன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கிடைக்கின்றன. அதேநேரம் சில மாவட்டங்களில் உற்பத்தி திறன் 1 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. தென் …

Read More »

அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, …

Read More »

10-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

சென்னை: பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை வளர்ச்சி கழகம் சார்பிலான 10-வது உலகத் தமிழர்பொருளாதார மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கிண்டியில்உள்ள ஒட்டல் லீ ராயல் மெரிடியனில் நேற்று நடைபெற்றது. இதற்கு சென்னை வளர்ச்சி கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்தலைமையும், மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் முன்னிலையும் வகித்தனர். இதில் சிறப்பு …

Read More »

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல். தனது முடிவை முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ல் திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக அவர் நியமிக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த …

Read More »