Breaking News
Home / செய்திகள் (page 72)

செய்திகள்

புற்றுநோயைக் குறைக்க ஸ்ரீராமச்சந்திரா பல்கலை. ஆராய்ச்சியில் வெற்றி: மருத்துவ இதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடு

சென்னை: புகையிலை பழக்கத்தை கைவிடவும், புற்று நோயை குறைக்கவும் புதிய ஆராய்ச்சியை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் வெற்றிகரமாக செய்துள்ளது. சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் துறை ஆய்வாளர்களும், மருத்துவர் களுமான முருகேசன் ஆறுமுகம், ராமன் லட்சுமி சுந்தரம், ஜெரார்டு ஏ.சுரேஷ், சதீஷ்குமார் கேசவன், விஷால் ஜெயஜோதி, மனீஷ் அருள்ஆகியோர் புகையிலை பழக்கத்தை எதிர் விளைவுகள் இன்றி கைவிடுவதற்கும், புற்றுநோய் வாய்ப்புகளை குறைப்பதற்குமான புதிய மருத்துவ ஆராய்ச்சி …

Read More »

திறந்திருக்கும் வீடுகளில் நுழையும் கட்சி அல்ல: அதிமுக அழைப்புக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்களை பிரதமர் மோடி இடைநீக்கம் செய்துள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் இது போன்ற செயல் நடந்தது கிடையாது. நாடாளுமன்றத்தில் பேசவே கூடாது என்று சொல்வதற்கு பிரதமர் மோடி யார், அவர் செய்தியாளர்களை சந்திப்பது இல்லை. கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதில்லை. மஹூவா மொய்த்ரா அம்பானி, அதானி குறித்து பேசியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது …

Read More »

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடிக்கு முதல்வர் நாளை பயணம்: மத்திய குழு இன்று ஆய்வு

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடிக்கு முதல்வர் நாளை செல்கிறார். இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி கோவையில் இருந்து டெல்லி சென்றார். அங்கு அவரை திமுக எம்.பி.க்கள்டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர். பிறகு ஸ்டாலினை, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று காலை சந்தித்து, கூட்டணியில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் …

Read More »

ஜன.4-க்கு பிறகு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நிர்வாக மேலாண் இயக்குநர்களிடம் 16 சங்கங்கள் நோட்டீஸ் வழங்கின

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜன.4-க்குப் பிறகு வேலைநிறுத்தம் நடைபெறும் என்று 16 சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப் உள்ளிட்ட 16 சங்கங்கள் ஆலோசித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குவதாக அண்மையில் முடிவு செய்தன. …

Read More »

பொங்கல் பரிசு, வெள்ள நிவாரண பணப்பலன்களை மக்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தலாம்: உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை

சென்னை: பொங்கல் பரிசு மற்றும் வெள்ள நிவாரணம் போன்ற பணப்பலன்களை பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் முறைகேடுகளை தவிர்க்க இயலும் என உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களி்ல் உறுப்பினர்களுக்கு வட்டி வருவாய் ரூ.40 ஆயிரத்துக்கு அதிகமானால் வருமானவரி சட்டத்தின் பிரிவுகள் 194ஏ மற்றும் 194என் ஆகியவற்றின் கீழ் வருமானவரி பிடித்தம் செய்ய மாநில அரசு தலைமை கூட்டுறவு வங்கி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த …

Read More »

முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக புகார்: ஓய்வுபெற்ற டிஜிபி நட்ராஜ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

சென்னை: முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ஓய்வுபெற்ற டிஜிபி நட்ராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்த கோயில்களை இடித்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ஆர்.நட்ராஜ் மீது திமுக வழக்கறிஞர் ஷீலா என்பவர் திருச்சி எஸ்பியிடம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஆர்.நட்ராஜ் மீது திருச்சி சைபர் …

Read More »

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் …

Read More »

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: 4-வது சுற்றில் குகேஷுக்கு வெற்றி

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 44-வது நகர்த்தலின் போது வெற்றிபெற்றார். இதன் மூலம் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இந்த தொடரில் குகேஷுக்குஇது முதல் …

Read More »

தென் மாவட்டங்களில் கனமழை: தி.மு.க இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சேலத்தில் வரும் டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க இளைஞரணி 2-வது மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க இளைஞரணி …

Read More »

தென்மாவட்டங்களில் கனமழையால் அரசு பேருந்துகளை குறைவாக இயக்க முடிவு: 350 ஆம்னி பேருந்துகள், 50 ரயில் சேவைகள் ரத்து

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் 50-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகளும், 350 ஆம்னி பேருந்து சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன. தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் ரயில் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையொட்டி சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தேபாரத் ரயில்கள், எழும்பூர் - திருச்செந்தூர், திருநெல்வேலி - ஜாம்நகர், …

Read More »